மிக்ஸர் சாப்பிட வரலை பாஸ்.. மிடில் ஆர்டரை இரும்பு மாதிரி ஆக்கிய சிஎஸ்கே.. களமிறக்கப்பட்ட மாஸ் வீரர்
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி கலக்கு வருகிறது. அந்த வகையில் மிடில் ஆர்டரை வலிமையாக்கும் விதமாக முக்கியமான ஒரு வீரரை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக சில வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. எதிர்பார்க்காத விதமாக முக்கியமான சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது தோனி படை. சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுத்துள்ளது. ராகுல் திரிபாதியை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. அவரை மிஸ் செய்ய கூடாது என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது.

இவரை எடுக்க கொல்கத்தா அணியும் தீவிரமாக முயன்றது. இதில் ஒருவழியாக 3.20 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அவரை எடுத்தது. இவர் மிடில் ஆர்டர் ஓப்பனிங் இரண்டும் ஆட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அணியில் மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது.
அதேபோல் கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார். இதேபோல் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு ஃபாரீன் ஆல் ரவுண்டர் தேவை இருந்தது. அதை மனதில் வைத்தே இன்று ஏலத்தில் கவனமாக இருந்தது. இதன் காரணமாகவே இன்று டு பிளசிஸ் வந்த போது சிஎஸ்கே கேட்கவில்லை. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் வந்த போதும் சிஎஸ்கே கேட்கவில்லை. முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.
இப்படி இருக்க மிடில் ஆர்டரை வலிமையாக்கும் விதமாக தீபக் ஹூடாவை சிஎஸ்கே எடுத்துள்ளது.1.70 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே இவரை எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியுடன் மோதி சிஎஸ்கே அணி இவரை எடுத்து உள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வலிமை அடைந்து உள்ளது.
நேற்று எடுக்கப்பட்ட வீரர்கள்:
நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்
டெவோன் கான்வே 6.25 கோடி ரூபாய்
ராகுல் திரிபாதி 3.40 கோடி ரூபாய்
ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்
ஆர் அஸ்வின் 9.75 கோடி ரூபாய்
விஜய் சங்கர் 1.2 கோடி ரூபாய்
கலீல் அகமது ரூ.4.80 கோடி ரூபாய்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
1 ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி)
2 மதீஷா பத்திரனா (13 கோடி)
3 சிவம் துபே (12 கோடி)
4 ரவீந்திர ஜடேஜா (18 கோடி)
5 எம்எஸ் தோனி (4 கோடி)
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications