ஐபிஎல் ஏலம்.. இதென்ன புதுசா இருக்கு.. ஆரம்பமே அடித்து ஆடிய சிஎஸ்கே.. பக்கா பிளானோடு வந்துருக்காங்க
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் தொடக்கத்திலேயே சிஎஸ்கே அணி ஏலம் கேட்டது கவனம் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. 577 வீரர்களின் பெயர்கள் இதில் ஏலம் விடப்பட உள்ளது. முதல் கட்ட ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.
முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து குஜராத் அணி போட்டியில் இணைந்தது. பின்னர் 10 கோடி தாண்டி ஏலம் சென்ற நிலையில் 15 கோடி ரூபாய் தாண்டிய நிலையில் ஹைதராபாத் - ராஜஸ்தான் இடையே கடுமையான போட்டி நிலவியது.

15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை இதையடுத்து ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.
இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். 10 அணிகளும் மொத்தமாக70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலம் முழு விபரம்:
முதல் அமர்வு - மாலை 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்
மதிய உணவு இடைவேளை - மாலை 5 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்கும்
இரண்டாவது அமர்வு - மாலை 5:45 முதல் இரவு 10:30 மணி வரை நடக்கும்
மார்க்கீ வீரர்கள் இரண்டு பட்டியல்களாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு பட்டியலிலும் ஆறு வீரர்கள் இடம்பெறுவார்கள்.
பட்டியல் 1
ரிஷப் பண்ட்
ஷ்ரேயாஸ் ஐயர்
ஜோஸ் பட்லர்
அர்ஷ்தீப் சிங்
ககிசோ ரபாடா
மிட்செல் ஸ்டார்க்
பட்டியல் 2
கேஎல் ராகுல்
யுஸ்வேந்திர சாஹல்
லியாம் லிவிங்ஸ்டன்
டேவிட் மில்லர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
577 வீரர்கள் பட்டியல்:
1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications