தோனி ஃபேர்வெல்.. பக்காவாக காய் நகர்த்திய பிளமிங்.. கப்பை எடுத்து வைங்க.. இதுதான் பிளேயிங் 11
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக சில வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. எதிர்பார்க்காத விதமாக முக்கியமான சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது தோனி படை. சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுத்துள்ளது. ராகுல் திரிபாதியை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. அவரை மிஸ் செய்ய கூடாது என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இரண்டு நாட்களில் 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு ஏலம் விடப்பட்டனர். ரிஷப் பந்த் (ரூ. 27 கோடி), ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 26.75 கோடி) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (ரூ. 23.75 கோடி) ஆகியோர் மெகா ஏலத்தில் மிகப்பெரிய அளவிற்கு ஏலம் போனார்கள், டேவிட் வார்னர், பிருத்வி ஷா மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்றவர்கள் யாரும் எடுக்கப்படாமல் அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்த ஐபிஎல் ஏலத்திற்கு பின் எந்த அணி வலிமையாக மாறி உள்ளது என்று ரேங்க் ரிப்போர்ட் பார்க்கலாம்.

சிஎஸ்கே அணியில் மீண்டும் அஸ்வின் திரும்பி வந்துள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக ஆர் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு திரும்பியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக மாறி உள்ளது.
அதேபோல் கடந்த சீசனில் ஆடிய ரச்சின் ரவீந்திரா 4 கோடி ரூபாய்க்கு மீண்டும் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்தை ரூபாய் 10 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது. அதேபோல் இந்திய அணியின் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் வீரர் 4.80 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு உள்ளார். இதேபோல் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். சிஎஸ்கே அணி எந்த விதமான பதற்றமும் இல்லாமல்.. எளிதாக சாம் கரணை அணியில் எடுத்துள்ளது. கடந்த சீசன் சிஎஸ்கே அணியில் ஆடாமல் போன அவர்.. இந்த சீசன் மீண்டும் மெகா ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: சூப்பர் கிங்ஸ் இதுவரை செய்ததிலேயே சிறப்பான ஏலம் இதுதான். கொஞ்சம் பாஸ்ட் பவுலிங் சொதப்பினாலும் மற்ற எல்லா பாக்ஸ்களையும் டிக் செய்துள்ளனர். CSK வலுவான வரிசையைக் கொண்டுள்ளது.
பலங்கள்
CSK வலுவான கோர் டீமை கொண்டுள்ளது.
ஒரு அற்புதமான சுழல் பந்துவீச்சு பிரிவு (நூர் அகமது, ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா) உள்ளது.
இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். (அன்ஷுல் கம்போஜ் (வேசிப்பந்து வீச்சாளர்), குர்ஜப்னீத் சிங் (வேகப்பந்து வீச்சாளர்), ராமகிருஷ்ண கோஷ் (பெரிய ஆல்-ரவுண்டர்), ஆண்ட்ரே சித்தார்த் (பேட்டர்).
புதிய பலமான வீரர்கள் உள்ளனர் (விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் ஷ்ரேயாஸ் கோபால்)
பலவீனங்கள்
ஃபினிஷர் பெரிதாக இல்லை
சிஎஸ்கே முழு அணி: தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (இந்தியா) - ரூ 18 கோடி | ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - ரூ 18 கோடி | மதீஷா பத்திரனா (இலங்கை) - ரூ 13 கோடி | சிவம் துபே (இந்தியா) - ரூ 12 கோடி | எம்எஸ் தோனி (இந்தியா) - ரூ 4 கோடி.
ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) - ரூ.10 கோடி | ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - ரூ 9.75 கோடி | டெவோன் கான்வே (நியூசிலாந்து) - ரூ 6.25 கோடி | சையத் கலீல் அகமது (இந்தியா) - ரூ 4.8 கோடி | ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - ரூ 4 கோடி | ராகுல் திரிபாதி (இந்தியா) - ரூ 3.4 கோடி | அன்ஷுல் கம்போஜ் (இந்தியா) - ரூ 3.4 கோடி | சாம் கர்ரன் (இங்கிலாந்து) - ரூ 2.4 கோடி | குர்ஜப்னீத் சிங் (இந்தியா) - ரூ 2.2 கோடி | நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) - ரூ 2 கோடி | தீபக் ஹூடா (இந்தியா) - ரூ 1.7 கோடி | ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து) - ரூ 1.5 கோடி | விஜய் சங்கர் (இந்தியா) - ரூ 1.2 கோடி | வன்ஷ் பேடி (இந்தியா) - ரூ 50 லட்சம் | முகேஷ் சவுத்ரி (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஷேக் ரஷீத் (இந்தியா) - ரூ 30 லட்சம் | கமலேஷ் நாகர்கோடி (இந்தியா) - ரூ 30 லட்சம் | ராமகிருஷ்ண கோஷ் (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஷ்ரேயாஸ் கோபால் (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஆண்ட்ரே சித்தார்த் (இந்தியா) - ரூ 30 லட்சம்
கணிக்கப்பட்ட பிளேயிங் XI - ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (WK), ஆர் அஷ்வின், மதீஷா பத்திரனா, சையத் கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ். தாக்கம் - நூர் அகமது/விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications