மிஸ் பண்ணிட்டாங்களே.. மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே.. மிக முக்கிய வீரரை உள்ளே புகுந்து தூக்கிய ஹைதராபாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி இன்று தொடக்கத்திலேயே 2 வீரர்களை எடுக்க முயன்றது. ஆனால் சில நிமிடங்கள் ஏலம் கேட்ட பின் சிஎஸ்கே அணி பின்வாங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி இன்று தொடக்கத்திலேயே முகமது ஷமியை ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி தீவிரமாக முயன்றது.

கொல்கத்தா அணியுடன் சிஎஸ்கே அணி தீவிரமாக மோதியது. பின்னர் இந்த மோதலில் லக்னோ அணி இணைந்தது. ஆனால் 5 கோடி ரூபாய்க்கு மேல் சிஎஸ்கே அணி பெரிதாக ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் போட்டி கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையே சென்றது. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணியும் போட்டியில் ஐக்கியம் ஆனது. இறுதியாக 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் ஷமி எடுக்கப்பட்டார் .

ipl auction 2025 ipl auction ipl 2025

இதேபோல்தான் முதல் ஆளாக வந்த அர்ஷ்தீப் சிங்கை சிஎஸ்கே அணி கேட்டது கவனம் பெற்றுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு அவரை ஏலம் கேட்டது. இதில் டெல்லி அணி இணைய.. ஏலம் 7.5 கோடி ரூபாய் வரை சென்றது. 7.5 கோடி ரூபாய்க்கு சென்னை போட்டியில் இருந்து விலகியது. இதையடுத்து குஜராத் அணி போட்டியில் இணைந்தது. பின்னர் 10 கோடி தாண்டி ஏலம் சென்ற நிலையில் 15 கோடி ரூபாய் தாண்டிய நிலையில் ஹைதராபாத் - ராஜஸ்தான் இடையே கடுமையான போட்டி நிலவியது.

15.75 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி அர்ஷ்தீப் சிங்கை எடுக்க முடிவு செய்தது. இதையடுத்து 18 கோடி ரூபாய்க்கு அவரின் ஏலத்தை இதையடுத்து ஹைதராபாத் உயர்த்தியது. அதை பஞ்சாப் அணி ஏற்றுக்கொண்ட நிலையில்.. அவர் பஞ்சாப் அணிக்கு ஏலம் விடப்பட்டார்.

577 வீரர்கள் பட்டியல்:

1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.

ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி

மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி

மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்

ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+