அடிச்சு தூக்கிட்டாங்களே.. இதுதான் குஜராத் பிளான்.. லட்டு மாதிரி.. முக்கிய பவுலரை அள்ளிய குஜராத் டீம்!
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான ககிசோ ரபாடாவை குஜராத் அணி எளிதாக எடுத்துள்ளது. இவரை வாங்க மும்பை அணி கடுமையாக போராடியது.
மும்பை அணி எப்போதும் பவுலர்களை அதிக விலைக்கு எடுக்கும். அந்த வகையில் இவரை எடுக்கவும் தீவிரமாக முயன்றது. அதன்படியே 9.5 கோடி ரூபாய் வரை இவரை எடுக்க மும்பை அணி முயன்றது. ஆனால் குஜராத் அணி விடாமல் துரத்தியது. 10.5 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி இவரை எடுக்க முயன்றது. அப்போது பஞ்சாப் அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்த விரும்புகிறதா என்று கேட்கப்பட்டது. பஞ்சாப் அணி இதை விரும்பவில்லை என்றதும்.. குஜராத் அணி 10.5 கோடி ரூபாய்க்கு அவரை தூக்கியது.

15 கோடி ரூபாய் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரபாடாவை 10.5 கோடி ரூபாய்க்கே எடுத்து குஜராத் அசத்தி உள்ளது. ரபாடா, கில், சுதர்சன், எஸ்.ஆர்.கே., தெவாட்டியா என்று குஜராத் அணியில் கோர் டீம் வலுவாக உருவாகி வருகிறது.
.
577 வீரர்களின் பெயர்கள் இதில் ஏலம் விடப்பட உள்ளது. முதல் கட்ட ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். 10 அணிகளும் மொத்தமாக 70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
577 வீரர்கள் பட்டியல்:
1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
பட்டியலிடப்பட்ட மார்கியூ வீரர்களில், டேவிட் மில்லர் தவிர மற்ற அனைவரும் தங்கள் ரிசர்வ் விலையை ரூ.2 கோடியாக நிர்ணயித்துள்ளனர். மில்லர் மட்டும் இன்று 1.5 கோடி ரூபாய்க்கு ரிசர்வ் செய்யப்பட்டு உள்ளார்.
ரிஷப் பண்ட்
ஷ்ரேயாஸ் ஐயர்
அர்ஷ்தீப் சிங்
கேஎல் ராகுல்
யுஸ்வேந்திர சாஹல்
டேவிட் மில்லர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
ஆகியோர் இந்த ஏலத்தில் அதிக அளவில் கவனிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications