IPL Auction: இன்று ஐபிஎல் ஏலம்! எத்தனை வீரர்கள் களமிறக்கப்படுகிறார்? யார் முக்கியம்? எத்தனை மணிக்கு
சென்னை: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. 577 வீரர்களின் பெயர்கள் இதில் ஏலம் விடப்பட உள்ளது.
இதில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். 10 அணிகளும் மொத்தமாக70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களும் சவுதி நேரப்படி மதியம் 1:00 மணிக்கு (3:30 PM இந்திய நேரம்) மெகா ஏலம் தொடங்கும் நடக்கும்.
முதல் அமர்வு - மாலை 3:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும்
மதிய உணவு இடைவேளை - மாலை 5 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்கும்
இரண்டாவது அமர்வு - மாலை 5:45 முதல் இரவு 10:30 மணி வரை நடக்கும்
மார்க்கீ வீரர்கள் இரண்டு பட்டியல்களாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு பட்டியலிலும் ஆறு வீரர்கள் இடம்பெறுவார்கள்.
பட்டியல் 1
ரிஷப் பந்த்
ஷ்ரேயாஸ் ஐயர்
ஜோஸ் பட்லர்
அர்ஷ்தீப் சிங்
ககிசோ ரபாடா
மிட்செல் ஸ்டார்க்
பட்டியல் 2
கேஎல் ராகுல்
யுஸ்வேந்திர சாஹல்
லியாம் லிவிங்ஸ்டன்
டேவிட் மில்லர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
577 வீரர்கள் பட்டியல்:
1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
பட்டியலிடப்பட்ட மார்கியூ வீரர்களில், டேவிட் மில்லர் தவிர மற்ற அனைவரும் தங்கள் ரிசர்வ் விலையை ரூ.2 கோடியாக நிர்ணயித்துள்ளனர். மில்லர் மட்டுமின்று 1.5 கோடி ரூபாய்க்கு ரிசர்வ் செய்யப்பட்டு உள்ளார்.
ரிஷப் பந்த்
ஷ்ரேயாஸ் ஐயர்
அர்ஷ்தீப் சிங்
கேஎல் ராகுல்
யுஸ்வேந்திர சாஹல்
டேவிட் மில்லர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
ஆகியோர் இந்த ஏலத்தில் அதிக அளவில் கவனிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications