தங்கம் மாதிரி.. சைடு கேப்பில் அள்ளிட்டாங்களே.. டெல்லி அணி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய.. பெரும் புள்ளி!
சென்னை: கடந்த ஐபிஎல் ஏலத்தில் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றவர்.. மிட்சல் ஸ்டார்க். கொல்கத்தா அணியால் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு அந்த சீசனில் கொல்கத்தா வெல்லவும் ஒரு காரணமாக இருந்தார். 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பவுலரான மிட்சல் ஸ்டார்க்கிற்கு இந்த முறையும் கடுமையான போட்டி நிலவியது.
டெல்லி அணி தொடக்கத்தில் இருந்தே அவருக்கு ஆர்வம் காட்டியது. கொல்கத்தா அணியும் அவரை மீண்டும் எடுக்க தீவிரமாக முயன்றது. 9 கோடி ரூபாய் வரை இரண்டு அணிகளும் மாறி மாறி போட்டியிட்டுக்கொண்டன. இதில் 9 கோடிக்கு பின் வேகம் குறைய பெங்களூர் அணியும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆனது. பெங்களூர் அணிக்கு நல்ல வீரர் வேண்டும் என்பதால்.. பெங்களூர் அணியும் தீவிரமாக முயன்றது.

கடைசியாக 11.75 கோடி ரூபாய்க்கு மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி அணி புதிய பவுலிங் குழுவை உருவாக்கும் நிலையில் இந்த ஏலம் கவனம் பெற்றுள்ளது.
577 வீரர்களின் பெயர்கள் இதில் ஏலம் விடப்பட உள்ளது. முதல் கட்ட ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்று உள்ளனர். 10 அணிகளும் மொத்தமாக 70 வெளிநாட்டு வீரர்களையும் சேர்த்து அதிகபட்சமாக 204 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்கீ வீரர்கள் இரண்டு பட்டியல்களாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஒவ்வொரு பட்டியலிலும் ஆறு வீரர்கள் இடம்பெறுவார்கள்.
பட்டியல் 1
ரிஷப் பண்ட்
ஷ்ரேயாஸ் ஐயர்
ஜோஸ் பட்லர்
அர்ஷ்தீப் சிங்
ககிசோ ரபாடா
மிட்செல் ஸ்டார்க்
பட்டியல் 2
கேஎல் ராகுல்
யுஸ்வேந்திர சாஹல்
லியாம் லிவிங்ஸ்டன்
டேவிட் மில்லர்
முகமது ஷமி
முகமது சிராஜ்
577 வீரர்கள் பட்டியல்:
1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications