உள்ளே வந்த சர்ப்ரைஸ் அணி.. ஐபிஎல் ஏலத்திற்கு பின்.. இந்த 4 அணிகளுக்குத்தான் பைனல் வாய்ப்பே! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 182 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த ஏலத்திற்கு பின் எந்த 4 அணிகளுக்குத்தான் அதிகமாக பைனல் வாய்ப்பே உள்ளது.

1. மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் ஏலத்திற்கு முன்பே முக்கியமான வீரர்களை தக்க வைத்தது, ஜஸ்பிரித் பும்ராவை ரூ 18 கோடிக்கு தங்கள் மிக முக்கியமான தேர்வாக தக்கவைத்துக் கொண்டனர். மார்கியூ செட்களில் இருந்து விலகி இருந்த மும்பை ஏலத்தில் புத்திசாலித்தனமான தேர்வுகளை செய்து தேவையான வீரர்களை மட்டுமே எடுத்தது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

வலிமை என்ன?: வலுவான இந்திய கோர் உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா,பும்ரா , சூர்யா குமார் யாதவ் அணியின் பலம்.

சிறந்த சுழல் தாக்குதல் (மிட்செல் சான்ட்னர், அல்லா கசன்பர், கர்ன் ஷர்மா) உள்ளனர்.

பாஸ்ட் பவுலிங் அட்டாக் - டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், ரீஸ் டாப்லி மற்றும் லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் பும்ரா மற்றும் ஹர்திக் உடன் இணைவார்கள்.

கவனிக்க வேண்டிய வீரர்கள் - யங் நமன் திர் மற்றும் வில் ஜாக்ஸ்

பலவீனம்: ஃபினிஷர் ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதியான பேக்-அப் இல்லை. மிடில் ஆர்டர் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் முழு அணி:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - RS 18 கோடி, சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - RS 16.35 கோடி, ஹர்திக் பாண்டியா (இந்தியா) - RS 16.35 கோடி, ரோஹித் சர்மா (இந்தியா) - RS 16.30 கோடி, திலக் வர்மா (இந்தியா) - RS. 8 கோடி.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து) - RS 12.5 கோடி, தீபக் சாஹர் (இந்தியா) - RS 9.25 கோடி, அல்லா கசன்பர் (ஆப்கானிஸ்தான்) - RS 4.8 கோடி, நமன் திர் (இந்தியா) - RS 5.25 கோடி, வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து) ) - RS 5.25 கோடி, மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து) - RS 2 கோடி, ரியான் ரிக்கெல்டன் (தென்னாப்பிரிக்கா) - RS 1 கோடி, ரீஸ் டாப்லி (இங்கிலாந்து) - RS 75 லட்சம், லிசாட் வில்லியம்ஸ் (தென்னாப்பிரிக்கா) - RS 75 லட்சம், ராபின் மின்ஸ் (இந்தியா) - RS 65 லட்சம் , கர்ண் ஷர்மா (இந்தியா) - RS 50 லட்சம், அஷ்வனி குமார் (இந்தியா) - RS 30 லட்சம், ஸ்ரீஜித் கிருஷ்ணன் (இந்தியா) - RS 30 லட்சம், ராஜ் அங்கத் பாவா (இந்தியா) - RS 30 லட்சம், சத்யநாராயண ராஜு (இந்தியா) - RS 30 லட்சம், பெவோன் ஜேக்கப்ஸ் (இந்தியா) - RS 30 லட்சம், அர்ஜுன் டெண்டுல்கர் (இந்தியா) - RS 30 லட்சம், விக்னேஷ் புதூர் (இந்தியா) - RS 30 லட்சம்.

2, குஜராத் அணி:

ஏலத்திற்கு முன்பே குஜராத் டைட்டன்ஸ் வலுவான கோர் அணியை உருவாக்கிவிட்டது. அவர்களின் கேப்டன் ஷுப்மான் கில், இரண்டாவது தேர்வாகத் தக்கவைக்கப்பட ஒப்புக்கொண்டார், ரஷித் கான் முதல் தேர்வாக தக்க வைக்கப்பட்டார். ஆஷிஷ் நெஹ்ராவும் அவரது கேம்ப்பும் முறையான திட்டத்தோடு ஏலம் மேற்கொண்டது தெரிய வந்துள்ளது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

பலம்: கோர் அணி வலிமையாக உள்ளது.

பவுலிங் வலிமையாக உள்ளது. ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ஜெரால்ட் கோட்ஸி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, அர்ஷத் கான் ஆகியோர் உள்ளனர்.

வலுவான ஸ்பின் கோர் (ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர்) உள்ளது.

ஓப்பனிங் சிறப்பாக உள்ளது: சுப்மான் கில், ஜோஸ் பட்லர்

நல்ல பினிஷர்கள் உள்ளனர்: ராகுல் தெவாடியா, ஷாருக் கான் மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் உள்ளனர்.

பலவீனங்கள்: கேப்டன் இன்னும் பெரிதாக தன்னை நிரூபிக்கவில்லை. மிடில் ஆர்டர் சொதப்பும் வாய்ப்புகள் உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் முழு டீம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - RS 18 கோடி, ஷுப்மான் கில் (இந்தியா) - RS 16 கோடி, ராகுல் தெவாடியா (இந்தியா) - RS 8 கோடி, பி சாய் சுதர்சன் (இந்தியா) - RS 6 கோடி, ஷாருக் கான் (இந்தியா) - RS 6 கோடி.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: ககிசோ ரபாடா (தென்னாப்பிரிக்கா) - RS 10.75 கோடி, ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - RS 15.75 கோடி, முகமது சிராஜ் (இந்தியா) - RS 12.25 கோடி, பிரசித் கிருஷ்ணா (இந்தியா) - RS 9.5 கோடி, நிஷாந்த் சிந்து (நிஷாந்த் சிந்து) ) - RS 30 லட்சம், மஹிபால் லோம்ரோர் (இந்தியா) - RS 1.7 கோடி, குமார் குஷாக்ரா (இந்தியா) - RS 65 லட்சம், அனுஜ் ராவத் (இந்தியா) - RS 30 லட்சம், மனவ் சுதர் (இந்தியா) - RS 30 லட்சம், வாஷிங்டன் சுந்தர் (இந்தியா) - RS 3.2 கோடி, ஜெரால்ட் கோட்ஸி (தென் ஆப்பிரிக்கா) - RS 2.4 கோடி, அர்ஷத் கான் (இந்தியா) - RS 1.3 கோடி, குர்னூர் ப்ரார் (இந்தியா) - RS 1.3 கோடி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கிந்தியத் தீவுகள்) - RS 2.6 கோடி, சாய் கிஷோர் (இந்தியா) - RS 2 கோடி, இஷாந்த் சர்மா (இந்தியா) - RS 75 லட்சம், ஜெயந்த் யாதவ் (இந்தியா) - RS 75 லட்சம், க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) - RS 2 கோடி, கரீம் ஜனத் (ஆப்கானிஸ்தான்) - RS 75 லட்சம், குல்வந்த் கெஜ்ரோலியா (இந்தியா) - RS 30 லட்சம்.

3. சென்னை சூப்பர் கிங்ஸ்:

சூப்பர் கிங்ஸ் இதுவரை செய்ததிலேயே சிறப்பான ஏலம் இதுதான். கொஞ்சம் பாஸ்ட் பவுலிங் சொதப்பினாலும் மற்ற எல்லா பாக்ஸ்களையும் டிக் செய்துள்ளனர். CSK வலுவான வரிசையைக் கொண்டுள்ளது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

பலங்கள்

CSK வலுவான கோர் டீமை கொண்டுள்ளது.
ஒரு அற்புதமான சுழல் பந்துவீச்சு பிரிவு (நூர் அகமது, ஆர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா) உள்ளது.
இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். (அன்ஷுல் கம்போஜ் (வேசிப்பந்து வீச்சாளர்), குர்ஜப்னீத் சிங் (வேகப்பந்து வீச்சாளர்), ராமகிருஷ்ண கோஷ் (பெரிய ஆல்-ரவுண்டர்), ஆண்ட்ரே சித்தார்த் (பேட்டர்).

புதிய பலமான வீரர்கள் உள்ளனர் (விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் ஷ்ரேயாஸ் கோபால்)

பலவீனங்கள்

ஃபினிஷர் பெரிதாக இல்லை

சிஎஸ்கே முழு அணி: தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (இந்தியா) - ரூ 18 கோடி | ரவீந்திர ஜடேஜா (இந்தியா) - ரூ 18 கோடி | மதீஷா பத்திரனா (இலங்கை) - ரூ 13 கோடி | சிவம் துபே (இந்தியா) - ரூ 12 கோடி | எம்எஸ் தோனி (இந்தியா) - ரூ 4 கோடி.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) - ரூ.10 கோடி | ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - ரூ 9.75 கோடி | டெவோன் கான்வே (நியூசிலாந்து) - ரூ 6.25 கோடி | சையத் கலீல் அகமது (இந்தியா) - ரூ 4.8 கோடி | ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - ரூ 4 கோடி | ராகுல் திரிபாதி (இந்தியா) - ரூ 3.4 கோடி | அன்ஷுல் கம்போஜ் (இந்தியா) - ரூ 3.4 கோடி | சாம் கர்ரன் (இங்கிலாந்து) - ரூ 2.4 கோடி | குர்ஜப்னீத் சிங் (இந்தியா) - ரூ 2.2 கோடி | நாதன் எல்லிஸ் (ஆஸ்திரேலியா) - ரூ 2 கோடி | தீபக் ஹூடா (இந்தியா) - ரூ 1.7 கோடி | ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து) - ரூ 1.5 கோடி | விஜய் சங்கர் (இந்தியா) - ரூ 1.2 கோடி | வன்ஷ் பேடி (இந்தியா) - ரூ 50 லட்சம் | முகேஷ் சவுத்ரி (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஷேக் ரஷீத் (இந்தியா) - ரூ 30 லட்சம் | கமலேஷ் நாகர்கோடி (இந்தியா) - ரூ 30 லட்சம் | ராமகிருஷ்ண கோஷ் (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஷ்ரேயாஸ் கோபால் (இந்தியா) - ரூ 30 லட்சம் | ஆண்ட்ரே சித்தார்த் (இந்தியா) - ரூ 30 லட்சம்

4.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கொஞ்சம் சொதப்பலுடன் இந்த முறை ஏலம் எடுத்துள்ளது. ஆனால் சில சிறப்பான வீரர்களை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

பலங்கள்

அசத்தல் டாப்-ஆர்டர் (அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன்)

கவனிக்க வைக்கும் மிடில் ஆர்டர் மற்றும் உள்ளூர் ஃபினிஷர் (நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் மற்றும் அபினவ் மனோகர்) உள்ளனர்.

நல்ல ஸ்பின் பவுலர்கள் (ராகுல் சாஹர் மற்றும் ஆடம் ஜம்பா) உள்ளனர்.

பேக்-அப் வேகப்பந்து வீச்சாளர்கள் (சிமர்ஜீத் சிங் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் உடன் முகமது ஷமி மற்றும் ஹர்ஷல் படேல்) உள்ளனர்

பலவீனங்கள்

நிரூபிக்கப்பட்ட சீமர்கள் இல்லை (எஸ்ஆர்எச் புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜனை விடுவித்தது)
மிடில் ஆர்டருக்கான பேக்-அப் ஆப்ஷன்கள் இல்லை
.
SRH முழு அணி: தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹென்ரிச் கிளாசென் (தென்னாப்பிரிக்கா) - RS 8 கோடி, பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) - RS 12 கோடி, அபிஷேக் சர்மா (இந்தியா) - RS 4 கோடி, டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - RS 5 கோடி, நிதிஷ் குமார் ரெட்டி (இந்தியா) - 2 கோடி ரூபாய்.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்: முகமது ஷமி (இந்தியா) - RS 10 கோடி, ஹர்ஷல் படேல் (இந்தியா) - RS 8 கோடி, இஷான் கிஷன் (இந்தியா) - RS 11.25 கோடி, ராகுல் சாஹர் (இந்தியா) - RS 3.2 கோடி, ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) - RS 2.4 கோடி, அதர்வா தைடே (இந்தியா) - RS 30 லட்சம், அபினவ் மனோகர் (இந்தியா) - RS 3.2 கோடி, சிமர்ஜீத் சிங் (இந்தியா) - RS 1.5 கோடி, ஜீஷன் அன்சாரி (இந்தியா) - RS 40 லட்சம், ஜெய்தேவ் உனத்கட் (இந்தியா) - RS 1 கோடி, பிரைடன் கார்ஸ் (இங்கிலாந்து) - RS 1 கோடி, கமிந்து மெண்டிஸ் (இலங்கை) - RS 75 லட்சம், அனிகேத் வர்மா (இந்தியா) - RS 30 லட்சம், எஷான் மலிங்கா (இலங்கை) - RS 1.2 கோடி, சச்சின் பேபி (இந்தியா) - RS 30 லட்சம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+