10 வீரர்களின் கெரியரே காலி ஆகிடுச்சே! ஐபிஎல் ஏலத்தால் வந்த வினை.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலையே
சென்னை: 2025 ஐபிஎல் ஏலத்தில் பல முக்கியமான வீரர்கள் வாய்ப்பை இழந்து உள்ளனர். பொதுவாக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனால்.. அது கிரிக்கெட் எதிர்காலத்தையே பலருக்கு பாதிக்கும். அந்த வகையில் இந்த முறை எடுக்கப்படாமல் போன 10 முக்கியமான வீரர்களின் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
1. டேவிட் வார்னர் - அடிப்படை விலை ரூ.2 கோடி
ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவர் வார்னர். இவரின் ஐபிஎல் பயணம் இதோடு முடிவு பெற்றுள்ளது. இதற்கு முன் ஹைதராபாத் அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த இவர் அதே அணியால் அவமதிக்கப்பட்டு பின்னர் டெல்லி சென்று இப்போது மொத்தமாக ஐபிஎல் வாய்ப்பை இழந்துள்ளார்.

2. ஜானி பேர்ஸ்டோ - அடிப்படை விலை 2 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐந்து வருடங்களில் 50 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ லீக்கில் ஆபத்தான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தார். இருப்பினும், பஞ்சாபில் கடந்த இரண்டு சீசன்களில் சரியாக ஆடாத நிலையில் இந்த முறை வாய்ப்பை இழந்துள்ளார்.
3. பிரித்வி ஷா - அடிப்படை விலை 75 லட்சம்
டெல்லி கேபிடல்ஸ் அவரை விடுவித்த பிறகு அவரின் சரிவு தொடங்கியது. கோபம், ஆணவம், திமிர் பேச்சு, பிட்னஸ் மீது கவனம் செலுத்தாமல் போனது அவருக்கு எதிராக மாறியது. 79 போட்டிகளில் விளையாடி 1893 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் அவரால் 16 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. காரணம் பிட்னஸ். அவர் கடந்த சீசனில் வெறும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இந்த முறை வாய்ப்பை இழந்துள்ளார்.
4: பியூஷ் சாவ்லா - அடிப்படை விலை 50 லட்சம்
ஐபிஎல் லீக்கின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவரான பியூஷ் சாவ்லாவின் ஐபிஎல் பயணம் முடிந்துள்ளது. 35 வயதான அவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அதற்கு முன் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். லீக்கில் பல போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
5. ஷர்துல் தாக்கூர் - அடிப்படை விலை 2 கோடி
இவர் எடுக்கப்படாமல் போனதுதான் பெரிய அதிர்ச்சி. கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தனது முத்திரையை பதித்த வீரர். இருப்பினும், அணிகளிடம் அதிக பணம் இல்லாதபோது ஏலத்தின் 2 ஆம் நாளில் அவர் வந்தார். அது அவருக்கு எதிராக மாறியது. ஷர்துலுக்கு காயம் ஏற்பட்டதும் அவர் எடுக்கப்படாமல் போக காரணம். 2024 ஆம் ஆண்டு சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் கடைசியாக விளையாடிய போது அவர் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. மயங்க் அகர்வால் - அடிப்படை விலை 1 கோடி
2022 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியதில் இருந்து மயங்க் அகர்வால் பெரிதாக உள்ளூர் போட்டிகளில்ஆடவில்லை . அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் கடந்த இரண்டு சீசன்களில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதே சமயம் பெரிதாக ஆடவில்லை. 2024 சீசனில், அவர் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
7. கேன் வில்லியம்சன் - அடிப்படை விலை ரூ.2 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் கடந்த இரண்டு வருட ஐபிஎல்லில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். உடல்தகுதியுடன் இருந்தாலும் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த முறை அவர்எடுக்கப்படவில்லை. வில்லியம்சன் தனது அடிப்படை விலையை ரூ.2 கோடியாக வைத்தது தவறு என்றும் கூறப்படுகிறது.
8. ஜேம்ஸ் ஆண்டர்சன் - அடிப்படை விலை ரூ.1.25 கோடி
ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏலத்தை ஈர்ப்பார் என்று சிலர் எதிர்பார்த்தனர். புகழ்பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சாளர் 704 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு.. முதல் முறையாக ஏலத்தில் பதிவு செய்தார். அனுபவ வீரர்களை வாங்குவதில் பெயர் பெற்ற சிஎஸ்கே கூட ஆண்டர்சனை கேட்கவில்லை. அவரது பெயர் கூட ஏலத்தில் எந்த அணியாலும் அழைக்கப்படவில்லை..
9. நவ்தீப் சைனி - அடிப்படை விலை 75 லட்சம்
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நவ்தீப் இந்த முறை ஏலம் போகாதது அதிர்ச்சி அளிக்கிறது.
10. சர்பராஸ் கான் - அடிப்படை விலை ரூ 50 லட்சம்
சர்பராஸ் கான் ஏலத்திற்கு செல்லவில்லை. அவரது சகோதரர் முஷீர் கான் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, சர்ஃபராஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடும் நிலையில் யாரும் அவரை எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications