குறி வச்சா தப்பாது.. மும்பையிடம் முட்டி மோதி.. சிஎஸ்கே எடுத்த இளம் வீரர்! யாருங்க இந்த குட்டி பையன்?
சென்னை: முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அன்ஷுல் கம்போஜ் சிஎஸ்கே அணியால் 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.
அன்ஷுல் கம்போஜ் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார். அக்டோபர் 2024 இல், ACC எனப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பைக்கான இந்திய A அணியில் இடம்பிடித்து கவனம் பெற்றார்.

அன்ஷுல் கம்போஜ் 2021-22 ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்காக 17 பிப்ரவரி 2022 அன்று அறிமுகமானார். அதன்பின் அதே ஆண்டு அன்ஷுல் கம்போஜ் ஹரியானாவுக்காக சையத் முஷ்டாக் அலி டிராபியில் தொடரில் முதல் முறை டி 20 போட்டிகளில் ஆடினார். அந்த சீசனில் அவர் சிறப்பாக ஆடியதாக சிஎஸ்கே மும்பை ஸ்கவுட்டில் இருந்தார்.
இரண்டு அணிகளின் ரேடாரில் இவர் இருந்தார். 2022-23 விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்த தொடர்களில் இவர் சிறப்பாக ஆடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளின் ரேடாரில் அவர் வந்தார் .
ஹரியானா அணிக்காக கம்போஜ், ரஞ்சி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக அறிமுகமானார். ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடியவர்.. எதிர்பார்க்காத விதமாக டி 20 போட்டிகளிலும் கலக்கினார். 2022-23 சையத் முஷ்டாக் அலி டிராபியில் 7 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும், 2023-24 விஜய் ஹசாரே டிராபியில் ஹரியானாவுக்காக 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஹரியானாவில் அந்த சீசனில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். முக்கியமாக டெத் ஓவர்களில் சிறப்பாக வீசினார். . இந்த நிகழ்ச்சிகள் அவரை 2024 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் வாங்க உதவியது. 2024-25 துலீப் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், முதல் வகுப்பு சுற்றுகளில் அவர் கவனத்தைப் பெற்றார்.
இந்தியா சி சார்பாக 3 போட்டிகளில் 17.12 சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாதம்.. கேரளாவுக்கு எதிராக ஹரியானா ஆடிய ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை செய்தார் . இந்த சாதனையை செய்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை காம்போஜ் பெற்றார். இவருக்கு 23 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணிக்கு நல்ல பவுலிங் ஆப்ஷனாக இருப்பார் சாகர் இடத்தை நிரப்பவும் வாய்ப்புகள் உள்ளன.
நாள் 1க்குப் பிறகு ஒவ்வொரு அணிகளின் பணப்பையிலும் மீதமுள்ள மொத்தத் தொகை:
மும்பை இந்தியன்ஸ்: ரூ. 26.1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரூ. 10.5 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரூ. 15.6 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ. 17.35 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ. 30.65 கோடி
டெல்லி தலைநகரங்கள்: ரூ. 13.8 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: ரூ. 17.5 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ. 14.85 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: ரூ. 22.5 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ. 5.5 கோடி












Click it and Unblock the Notifications