மிடில் ஆர்டர் சம்பவம்.. சத்தமின்றி முக்கிய வீரர்.. அப்படியே தூக்கிய சிஎஸ்கே.. இதுதான் தரமான முடிவு
சென்னை: இன்று தொடக்கத்தில் இருந்தே ராகுல் திரிபாதியை எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. அவரை மிஸ் செய்ய கூடாது என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது.
இவரை எடுக்க கொல்கத்தா அணியும் தீவிரமாக முயன்றது. இதில் ஒருவழியாக 3.20 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அவரை எடுத்தது. இவர் மிடில் ஆர்டர் ஓப்பனிங் இரண்டும் ஆட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

577 வீரர்கள் பட்டியல்:
1574 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த பிறகு, 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டனர். இங்கிலாந்து சீமர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோர் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம், பட்டியல் 577 வீரர்களாக மாற்றப்பட்டது.
ஒவ்வொரு அணிக்கும் உள்ள ஏல பர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 110.5 கோடி (அதிகபட்சம்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 41 கோடி (குறைந்தபட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் - 73 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 69 கோடி
குஜராத் டைட்டன்ஸ் - 69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் - 55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 51 கோடி
மும்பை இந்தியன்ஸ் - 45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 45 கோடி
மிக உயர்ந்த மற்றும் குறைந்த ரிசர்வ் விலைகள்
ரூ.2 கோடியே அதிக ரிசர்வ் விலையாகும், இந்த தொகையில் 81 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
குறைந்த ரிசர்வ் விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
கான்வாயை எடுத்த சிஎஸ்கே: சிஎஸ்கே எதிர்பார்த்தபடியே நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுக்க தொடக்கத்திலேயே கை தூக்கியது. 2 கோடி ரூபாய்க்கு தொடக்கத்திலேயே அவரை எடுக்க முயன்றது. எப்போதும் எந்த வீரரை எடுத்தாலும் சிஎஸ்கே அணிக்கு போட்டியாக பஞ்சாப் வரும். அதேபோல் இன்றும் பஞ்சாப் போட்டியிட்டது.
இவரை எடுக்க சிஎஸ்கேவை விடக்கூடாது என்று பஞ்சாப் வேலையை காட்டியது. கடந்த முறையும் ஏலங்களில் இப்படி பஞ்சாப் செய்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை எடுக்க பஞ்சாப் - சிஎஸ்கே இடையே மாறி மாறி போட்டி நடந்தது. இதையடுத்து 3 கோடி ரூபாய்க்கு பின் விட்டு பிடிக்கலாம் என்று சிஎஸ்கே கொஞ்சம் ஆர்வம் இல்லாதது போல இருந்தது. கடைசியில் மாறி மாறி போட்டி செல்ல.. ஒருவழியாக சிஎஸ்கே அணி 6.25 கோடி ரூபாய்க்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேவன் கான்வாயை அணியில் மீண்டும் எடுத்தது. இதுதான் சிஎஸ்கேவின் முதல் பை ஆவார்.












Click it and Unblock the Notifications