ஐபிஎல் பிராண்ட் மதிப்பு புதிய உச்சம்.. மோசமான இடத்திற்கு சரிந்த சிஎஸ்கே வேல்யூ.. அப்போ யார் டாப்!
டெல்லி: ஐபிஎல் தொடர்பாகவும் அதன் பிஸ்னஸ் மற்றும் சந்தை மதிப்பு தொடர்பான விவரங்களை ஹூலிஹான் லோகி என்ற சர்வதேச வங்கி பகிர்ந்துள்ளது. ஹூலிஹான் லோகியின் அறிக்கையில் ஐபிஎல் சந்தை மதிப்பு எவ்வளவு.. எந்த அணிக்கு அதிகபட்ச சந்தை மதிப்பு இருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஹூலிஹான் லோகி பங்கு மதிப்பு 12.9 சதவீதம் உயர்ந்து 18.5 பில்லியன் டாலராக இருக்கிறது. ஹூலிஹான் லோகி என்ற உலகளாவிய முதலீட்டு வங்கியின் அறிக்கை கூறுகிறது. அணிகளைத் தவிர்த்துவிட்டு, வெறுமன ஐபிஎல்-ன் பிராண்ட் மதிப்பு மட்டும் பார்த்தோம் என்றாலும் கூட அது 13.8% அதிகரித்து 3.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் பிராண்டு மதிப்பு
ஐபிஎலில் நான்கு அசோசியேட் ஸ்பான்சர் இடங்களுக்குச் சமீபத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மூலம் ரூ. 1,485 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது முந்தைய சுழற்சியை விட 25% அதிகமாகும். டாட்டா குழுமத்துடனான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 2028 வரை ஐந்து வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2,500 கோடி) ஆகும்.
டாப் இடத்தில் யார்
அணிகளைப் பொறுத்தவரை இப்போது ஆர்சிபி அணியின் சொத்து மதிப்பு தான் அதிகபட்சமாக இருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் மதிப்பு உச்சத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பு 269 மில்லியன் டாலராக உயர்ந்து டாப்பில் இருக்கிறது. இது கடந்த ஆண்டு 227 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது..
அடுத்து இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. மும்பை அணியின் மதிப்பு கடந்த 2024இல் 204 மில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு அது 242 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் பிறகு வலுவான கம்பேக் கொடுத்தது. ஆனால் 2வது குவாலிபையர்ஸ் போட்டியில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது. இப்போது மும்பை அணியின் சந்தை மதிப்பு 2வது இடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கே எங்கே
இதில் மூன்றாவது இடத்தில் சென்னை அணி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பிராண்ட் மதிப்பு 235 மில்லியன் டாலராக குறைந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று, ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து இடங்கள்
அடுத்து நான்காவது இடத்தில் கொல்கத்தா இருக்கிறது. கொல்கத்தா அணியின் பிரண்ட் மதிப்பு இப்போது 227 மில்லியன் டாலராக இருக்கிறது. இந்த டாப் 4 அணிகளின் பிரண்ட் மதிப்பு மட்டுமே 200 மில்லியனுக்கு மேல் இருக்கிறது. அடுத்து ஐந்தாவது இடத்தில் ஹைதராபாத் அணியின் சந்தை மதிப்பு இருக்கிறது. ஹைதராபாத் சந்தை மதிப்பு 154 மில்லியன் டாராக இருக்கிறது. டெல்லி அணி ரொம்பவே அருகே 152 மில்லியன் டாலருடன் 6வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 146 மில்லியன் டாலர், குஜராத் அணி 142 மில்லியன் டாலருடன் முறையே 7 மற்றும் 8ஆவது இடங்களில் இருக்கிறது.
அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப்
பஞ்சாப் அணி இதில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனாலும், ஓராண்டில் அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தது பஞ்சாப் தான். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரண்ட் மதிப்பு 2024 உடன் ஒப்பிடுகையில் 39.6% உயர்ந்துள்ளது. பஞ்சாப் அணியின் பிரண்ட் மதிப்பு இப்போது ரூ.141 கோடியாக இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. பைலன்ஸிலும் கூட வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் பஞ்சாப் தோல்வியைத் தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications