சுப்மன் கில் சரிபட மாட்டார்.. கவுதம் கம்பீரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. இஷான் கிஷனை தேர்வின் பின்னணி!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டு, அவர்களின் இடத்தில் இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இஷான் கிஷனை தேர்வு செய்திருப்பது பிசிசிஐ எடுத்துள்ள அறிவுப்பூர்வமான முடிவுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு, இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இஷான் கிஷனை இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்திருப்பது பிசிசிஐ எடுத்த அறிவார்ந்த முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இத்தனை நாட்களாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ முயற்சித்து வந்தது. இதனால் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் பெஞ்ச் செய்யப்பட்டார். அதேபோல் ஃபினிஷிங் ரோலில் ஆடக் கூடிய ஜித்தேஷ் சர்மா பிளேயிங் லெவனில் ஆடி வந்தார். ஆனால் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை.
இதனால் மீண்டும் சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக பயன்படுத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதேபோல் மாற்று விக்கெட் கீப்பராக ஒருவர் தேவை. அவருக்கு சஞ்சு சாம்சனின் இடத்தை நிரப்பும் திறமையும் இருக்க வேண்டும் என்றும் பார்த்திருக்கிறது. அப்படியே நகலெடுத்தது போல் இஷான் கிஷன் இருக்கிறார். சமீபத்தில் SMAT தொடரில் ஜார்க்கண்ட் அணியியின் கேப்டனாக இருந்து இஷான் கிஷன் கோப்பையை வென்றார்.
அதேபோல் SMAT தொடரில் அதிக ரன்களையும் விளாசி இஷான் கிஷன் அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சனுக்கான மாற்று வீரராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் டாப் ஆர்டர் விக்கெட் கீப்பர் தான். அதேபோல் ஜித்தேஷ் சர்மா ஆடிய ஃபினிஷர் ரோலில் ரிங்கு சிங்கால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். அதனால் ரிங்கு சிங்கையும் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது.
கடைசியாக இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையை பிசிசிஐ எடுத்திருந்தது. அதன்பின் இஷான் கிஷனை இந்திய அணியில் சேர்க்காமல் புறக்கணித்து வந்த அஜித் அகர்கர், தற்போது ஈகோவை வெளிக் காட்டாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் சேர்த்திருக்கிறது. இதனால் பிசிசிஐ நிர்வாகத்தையும், தேர்வுக் குழுவையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
776 ரன்கள் அடித்தும் ஏமாற்றம்.. தோல்வியால் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. ஓடிவந்து ஆறுதல் கூறிய பட்லர் -
"நான் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி" தெறிக்கும் ராஜஸ்தான் மீம்ஸ்! -
கெய்ல், வார்னரால் கூட செய்ய முடியாத சாதனை.. பவர்பிளேயில் 500 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications