ஒற்றை ஆளாக வித்தையை காட்டிய இஷான் கிஷன்.. 9 ரன்களில் மிஸ்ஸான சதம்.. உற்சாகமான காவ்யா மாறன்!
ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 9 ரன்களில் சதத்தை மிஸ் செய்துள்ளார். 44 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 91 ரன்களை விளாசிய இஷான் கிஷன், சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் ஐதராபாத் மைதானமே எழுந்து நின்று இஷான் கிஷனை பாராட்டி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் பவர் பிளே ஓவர்களில் அட்டாக் செய்ய வேண்டிய பொறுப்பு கேப்டன் இஷான் கிஷன் மீது விழுந்தது. பவ்ர் பிளே ஓவர்களில் பவுண்டரிகளை விளாசினாலும், கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேட்டிங் செய்தார். ஆனால் 6 ஓவர்களுக்கு பின் இஷான் கிஷனின் பேட்டிங் உச்சத்திற்கு சென்றது. 30 பந்துகளில் சிக்ஸ் அடித்து அரைசதத்தை எட்டிய இஷான் கிஷன், பின்னர் விஸ்வரூபம் எடுத்தார்.
அதிலும் துஷார் தேஷ்பாண்டே வீசிய 11வது ஓவரில் 21 ரன்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து ஆர்ச்சர் பந்திலும் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசினார். இதனால் இஷான் கிஷன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது 91 ரன்களில் ஆடிய இஷான் கிஷன், சிக்ஸ் அடிக்கும் நோக்கில் பேட்டை சுழற்றினார். ஆனால் அது மேலே எகிறியதால், பவுலர் கைகளிலேயே கேட்ச்சானது.
இதனால் 44 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இஷான் கிஷனின் சதம் 9 ரன்களில் மிஸ்ஸானது. இருந்தாலும் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். அதேபோல் இந்த ஐதராபாத் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை.
இந்த பிட்சில் பவுலர்களுக்கும் உதவி கிடைப்பதாக தெரிகிறது. இதனால் ஐதராபாத் அணியின் பவுலர்கள் கொஞ்சம் திட்டமிட்டால், ராஜஸ்தான் அணிக்கு சவால் அளிக்க முடியும். மேலும் இஷான் கிஷனின் அதிரடி காரணமாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications