2 ஆண்டுகளுக்கு பின்.. கம்பேக் இன்னிங்ஸில் சொதப்பிய இஷான் கிஷன்.. ஸ்லோ பந்தில் ஏமாந்த பாக்கெட் டைனமோ!
நாக்பூர்: 2 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள இஷான் கிஷன், தனது முதல் இன்னிங்ஸில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகி இருக்கும் இஷான் கிஷன், இந்த தொடரிலேயே நல்ல ரன்களை விளாசி ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் விளையாடி இருந்தார். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வான போதும், திடீரென அதிருப்தி அடைந்து ஓய்வு கோரி நாடு திரும்பினார். இதனால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கோபமடைந்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

இதன்பின் இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஆனால் மீண்டும் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும் என்று இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக இருந்து ஜார்க்கண்ட் அணியை முதல்முறையாக வெற்றி பெற வைத்தார். இந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்களை விளாசியதும் இஷான் கிஷன் தான்.
இதனால் இந்திய டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இஷான் கிஷனுக்கு நேரடியாக வாய்ப்பு கிடைத்தது. பேக் அப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், திடீரென திலக் வர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வாகி இருக்கும் இஷான் கிஷன் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்று சூர்யகுமார் யாதவ் அறிவித்தார்.
அதற்கேற்ப சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஜெர்சியில் இஷான் கிஷன் களம் புகுந்தார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, இஷான் கிஷன் வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஒரு ஷார்ட் பாலை லெக் சைடு திசையில் விளாச, அதுவும் பவுண்டரிக்கு சென்றது.
அடுத்த பந்தில் அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்து டவுன் தி டிராக் இறங்கி சென்ற இஷான் கிஷான், திடீரென ஸ்லோயர் பந்தை கணிக்காமல் ஷாட் ஆடினார். அது நேராக கவர்ஸ் திசையில் நின்றிருந்த சாப்மேன் கைகளில் சிக்கியது. இதனால் இஷான் கிஷன் 5 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications