Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2003 ஆ.. 2019ஆ? ரிப்பீட் ஆகும் கண்டம் .. இந்திய அணிக்கு செமி, பைனல் இரண்டிலும் பெரிய பிரச்சனைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணிக்கு செமி பைனல் மற்றும் பைனல் இரண்டிலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய கண்டம் காத்திருக்கிறது.

2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

 It is 2003 or 2019: Which World Cup Scenario is happening against in 2023 World Cup Cricket for India

அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. கடைசியாக இலங்கை, அதன்பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

செமி பைனல் ஆட்டங்கள்; இந்திய அணி செமி பைனலுக்கு சென்றுவிட்டது. சம்பிரதாய முறைப்படி இந்திய அணி அடுத்த மேட்சில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும். அதைத்தவிர இந்திய அணிக்கு இந்த லீக் ஆட்டங்களில் பெரிய போட்டி எதுவும் இல்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய அணிக்கு செமி பைனல் மற்றும் பைனல் இரண்டிலும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிய கண்டம் காத்திருக்கிறது. அதன்படி இந்தியா ஒருவேளை செமி பைனல் வென்று பைனல் சென்றால் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

ஒரு பக்கம் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையே செமி பைனல் நடக்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியா வென்றால் அவர்கள் பைனல் செல்வார்கள். அப்படி நடந்தால் இந்தியா பைனல் செல்லும் பட்சத்தில் அது இந்தியா vs ஆஸ்திரேலியா பைனல் என்று இருக்கும். அதோடு இல்லாமல் 2003ல் கங்குலி தலைமையில் நடந்த உலகக் கோப்பையின் பைனல் ரிட்டர்ன் போல இருக்கும். அந்த மேட்சில் இந்தியா தோற்றது இப்போதும் பல 90ஸ் கிட்ஸ்களுக்கு ஆறாத ரணமாக இருக்கும் .

செமி பைனல் முக்கியம்: அதற்கு முன்னதாக செமி பைனலில் வெல்ல வேண்டும். தற்போது எமி பைனலுக்கு செல்லும் அணிகளில் கடைசி இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் வாய்ப்பு முன்னர் 30 சதவிகிதத்திற்கும் கீழ் இருந்தது. அது தற்போது 40 சதவிகிதம் ஆகி உள்ளது. நியூசிலாந்து வாய்ப்பு 43 சதவிகிதம் ஆகி உள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் இன்னும் உயிர் இருக்கிறது. ஆம்.. இனி நடக்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வரிசையாக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்று.. மீதம் உள்ள போட்டிகளில் நியூசிலாந்து தோல்வி அடைந்தால்.. பாகிஸ்தான் எளிதாக உள்ளே செல்ல முடியும். நான்காம் இடத்தை பிடிக்க ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் நியூசிலாந்து வென்று செமி பைனல் வந்தால் 2019 உலகக் கோப்பை போல மாறிவிடும். அதில் செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தோம். இந்த நிலையில்தான் 2019 உலகக் கோப்பை போல இந்த வருடம் இருக்குமா? அல்லது 2003 உலகக் கோப்பை போல இந்த வருடம் இருக்குமா? அல்லது இந்தியா புதிய வரலாறு படைக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+