சேப்பாக்கம் மைதானம் மேல் கம்பீரமாய் ஜடேஜாவுக்கு சிலை.. சிஎஸ்கே தளபதிக்கு பிரியாவிடை கொடுத்த சென்னை!
சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அதனையொட்டி சிஎஸ்கே அணியின் தளபதி ரவீந்திர ஜடேஜாவுக்கு சென்னை அணி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளது. அந்த வீடியோவில் சேப்பாக்கம் மைதானம் மேல் கம்பீரமாய் ஜடேஜா சிலையாக இருப்பது போல் உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்த்த டிரேட் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரர் சாம் கரணையும் ராஜஸ்தான் அணிக்கு தாரை வார்த்துள்ளது சிஎஸ்கே. அதற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கி இருக்கிறது.

தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டாலும், ஜடேஜாவின் வெற்றிடத்தை யாரை கொண்டு சிஎஸ்கே நிரப்பப் போகிறது என்பது இதுவரை தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ரூ.18 கோடிக்கு கடந்த சீசனில் ரீடெய்ன் செய்த நிலையில், தற்போது அவருக்கு ரூ.14 கோடிக்கு மட்டுமே ராஜஸ்தான் அணி ஊதியமாக அளிக்க உள்ளது.
இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா தனது ஊதியத்தையும் குறைத்து கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜடேஜா தனது தொடக்க கால சிஎஸ்கே அனுபவங்கள் குறித்தும், சிஎஸ்கே அணியுடனான பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
அதேபோல் ஜடேஜாவின் சிறந்த ஆட்டங்களின் தொகுப்பையும் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. குறிப்பாக 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் ஜடேஜா 6, 4 அடித்து வெல்ல வைத்த பின், தோனி அவரை தூக்கிக் கொண்டாடியதை யாராலும் மறக்க முடியாது. இறுதியாக தமிழக மக்களுக்கு நன்றி என்று ஜடேஜா பேசியுள்ளார்.
அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தின் மேல் ஜடேஜாவுக்கு ஒரு மாபெரும் சிலை வைத்திருப்பதையும் போல் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவுக்கு பிரியாவிடையை கொடுத்து வழியனுப்பி வருகின்றனர். மேலும் ஜடேஜாவின் மீதான அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications