மீண்டும் முதுகில் குத்திய பிசிசிஐ.. அறிவிப்பு மேடையிலேயே அவமானப்படுத்திய அகர்கர்.. சோகமான பும்ரா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட மேடையிலேயே பும்ரா அவமானப்படுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் இடையே விவாதம் தொடங்கி இருக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சுப்மன் கில் போட்டியில் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார்.

Jasprit Bumrah backstabed and insulted by Ajit Agarkar during the Shubman Gill Captaincy announcement

சதம் அடிக்காத இந்திய கேப்டன்

இதன் மூலமாக இந்திய டெஸ்ட் அணியின் 5வது இளம் கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். வெளிநாடுகளில் ஒரு சதத்தை கூட விளாசாத சுப்மன் கில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு சதம் அடித்ததில்லை.

பும்ரா பற்றி அகர்கர்

அஜித் அகர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் நீண்ட கால நோக்கத்தை வைத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்று அல்லது 2 தொடர்களுக்காக ஒரு கேப்டனை தேர்வு செய்ய முடியாது என்றும் கூறி இருக்கிறார். அதேபோல் பும்ராவுக்கு ஏன் கேப்டன்சி அளிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, இங்கிலாந்து தொடரிலேயே பும்ரா முழுமையாக விளையாட மாட்டார்.

பும்ரா வயது

1 அல்லது 2 போட்டிகளில் பும்ராவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது பும்ராவுக்கு காயம் காரணமாகவே இந்திய அணியின் கேப்டன் பதவி மறுக்கப்பட்டுள்ளதாக அஜித் அகர்கரின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும். 31 வயதாகும் பும்ரா, தாராளமான இன்னும் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட முடியும்.

பும்ராவின் கேப்டன்சி

2018ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் பும்ரா, இதுவரை மொத்தமாக ஓராண்டு மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டை தவறவிட்டிருக்கிறார். அதேபோல் களத்தில் இருந்தால் பும்ரா தனது திட்டங்களை இயல்பாகவே உருவாக்கி வெற்றிபெறக் கூடியவர். பெர்த் டெஸ்ட் போட்டியிலேயே பும்ராவின் நிபுணத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.

சூப்பர்ஸ்டார் கலாச்சாரம்

ஆனால் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் மற்றும் விளம்பர வருவாயை இழக்க விரும்பாத பிசிசிஐ, மீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டாரை உருவாக்கும் நோக்கில் சுப்மன் கில்லை முன்னிலைப்படுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடு தான் சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் நடுவர்களுடன் ஆவேசமாக மோதுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

முதுகில் குத்திய பிசிசிஐ

அதேபோல் ஏராளமான முறை இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பத்தை பும்ரா வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு, எப்போதும் தனது பெயரையே பும்ரா கூறி வந்துள்ளார். இதனால் கேப்டன்சி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த அவரின் முதுகில் பிசிசிஐ குத்தி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+