சிஎஸ்கேவை பாலோ செய்யும் காவ்யா மாறன்.. இஷான் கிஷனுக்கு அடித்த ஜாக்பாட்.. இதை கவனிச்சீங்களா!
மும்பை: சிஎஸ்கே அணியை போலவே ஐதராபாத் அணியின் வீரர்களையும் பிராண்டிங் செய்ய அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கேற்ப நட்சத்திர வீரராக இஷான் கிஷன் உருவாகிவிட்ட சூழலில், நானி ஸ்டைலில் பக்கா மாஸ் வீடியோவை இஷான் கிஷனை வைத்து ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை அணிகளும் விளம்பரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வழக்கமாக பிராண்டிங்கில் உச்சத்தில் இருக்கும் அணி என்றால் அது சிஎஸ்கே தான். ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ஸ்டைலில் பிராண்ட் செய்வார்கள். உதாரணமாக தோனியை தல என்றும், ஜடேஜாவை தளபதி என்றும் பிராண்ட் செய்தனர்.

அதேபோல் சுரேஷ் ரெய்னாவை சின்னதல என்றும், சிவம் துபேவை ஆறுச்சாமி என்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றனர். அதேபோல் தோனியின் அறிமுக வீடியோவுக்கு லியோ காட்சிகளை மீள் உருவாக்கம் செய்தது. சஞ்சு சாம்சனுக்கு கூலி காட்சியை மீள் உருவாக்கம் செய்தது. அதுமட்டுமல்லாமல் தோனியின் என்ட்ரிக்கு ரஜினி, விஜய், விஜயகாந்த் பாடல்களை ஒலிக்கவிட்டு அலப்பறை செய்வார்கள்.
இன்னும் சொல்லப்போனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் "வைப்" வேறு எந்த மைதானத்திலும் இருக்காது. மும்பை, கொல்கத்தா, பெங்களூர் மைதானங்களில் கரகோஷம் எழும் என்றாலும், நடிகர்களோடு ஒப்பிட்டு வீரர்களை பிராண்ட் செய்வதில் சிஎஸ்கே கிங்காக இருந்து வருகிறது. அந்த வழியை ஐதராபாத் அணி பின்பற்ற தொடங்கி இருக்கிறது.
பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஷான் கிஷனை கேப்டனாக அறிமுகம் செய்யும் வீடியோவை ஐதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் நானியின் சாட்டர்டே திரைப்படத்தின் காட்சியை மீள் உருவாக்கம் செய்து இஷான் கிஷன் அறிமுகமாகி இருக்கிறார்.
அப்போது ஒலிக்கப்படும் சிவ தாண்டவம் பாடலும் பக்கா மாஸாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே காவ்யா மாறன் சிஎஸ்கே அணி சன் பிக்சர்ஸ் படத்தின் பாடல்களை பயன்படுத்த கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் வீடியோக்கள் அவ்வளவு மாஸாக இல்லை. சிஎஸ்கே அணியின் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரிதாக எடுபடவில்லை.
𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 𝐈𝐬𝐡𝐚𝐧 𝐓𝐡𝐚𝐧𝐝𝐚𝐯𝐚𝐦 begins 🦅🔥 pic.twitter.com/etJjC953NK
— SunRisers Hyderabad (@SunRisers) March 21, 2026
தற்போது சிஎஸ்கே அணியின் பாணியை பின்பற்றி ஐதராபாத் அணியை பிராண்ட் செய்ய தொடங்கி இருக்கிறார் காவ்யா மாறன். தெலுங்கு மாநிலங்களை குறி வைத்து தெலுங்கு சினிமா நாயகர்களின் பக்கா மாஸ் காட்சிகளையும், பாடல்களையும் வரும் காலங்களில் ஐதராபாத் அணி பின்பற்றும் என்று பார்க்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications