W, 0, W, 0, W.. ராஜஸ்தான் அணியை அலறவிட்ட அறிமுக வீரர் பிரஃபுல்.. துள்ளிக் குதித்த காவ்யா மாறன்!
ஐதராபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரை வீசிய அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே 1 ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் மற்றும் ப்ரிடோரியஸ் ஆகியோரை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி கேப்டன் இஷான் கிஷனின் அதிரடியாக ஆட்டத்தால், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 91 ரன்களை விளாசினார். இதன்பின் 217 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி வைபவ் சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் அறிமுக வீரர் பிரஃபுல் ஹிங்கே முதல் ஓவரை வீசினார். 2வது பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி புல் ஷாட் அடிக்க முயற்சித்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
வைபவ் சூர்யவன்ஷி அடித்த பந்து மேலே பறந்த போதே இருக்கையில் இருந்து எழுந்த துள்ளிக் குதித்த காவ்யா மாறன், கேட்சை சரியாக பிடித்துவிட வேண்டும் என்று கடவுளிடம் வேண்ட தொடங்கினார். தொடர்ந்து 4வது பந்தில் துருவ் ஜுரெல் இன்சைட் எட்ஜாகி போல்டாகினார். இவரும் டக் அவுட்டாகி வெளியேற, இளம் வீரர் ப்ரிடோரியஸ் களமிறங்கினார்.
அவரும் முதல் ஓவரின் கடைசி பந்தில் தூக்கி அடித்து டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அறிமுக போட்டியிலேயே படைத்துள்ளார் பிரஃபுல் ஹிங்கே.
அதுமட்டுமல்லாமல் அவர் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் ரியான் பராக்கும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 3 ஓவர்களை வீசிய பிரஃபுல் ஹிங்கே 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீரர், ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications