அபிஷேக் சர்மாவின் தரமான சதம்.. துள்ளிக் குதித்து குழந்தையை போல் கொண்டாடிய காவ்யா மாறன்!
ஐதராபாத்: ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 2வது ஐபிஎல் சதத்தை கண்டு அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகமாக கொணாடிய வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. கிட்டத்தட்ட காவ்யா மாறன் ஒரு குழந்தையை போல் அந்த தருணத்தை கொண்டாடி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 135 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் நின்றார்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணி தரப்பில் இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த சீசனில் ஐதராபாத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். இதன் மூலமாக ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.
சிறப்பாக விளையாடி சதம் விளாசிய அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஐதராபாத் அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற புதிய வரலாற்றையும் அபிஷேக் சர்மா படைத்துள்ளார். 78 இன்னிங்ஸில் 7 முறை ஆட்டநாயகன் விருதினை அபிஷேக் சர்மா கைப்பற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் கொண்டாட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது. அபிஷேக் சர்மாவின் சதத்தை உற்சாகம் அடைந்த காவ்யா மாறன், இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல குதூகலத்துடன் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
பொதுவாகவே காவ்யா மாறன் தனது அணி வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும், விளாசும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் அதிக ஈடுபாட்டுடன் ஆதரவளிப்பவர் என்பது தெரிந்ததே. இந்த சீசனில் காவ்யா மாறனின் கொண்டாட்டம் உச்சத்தில் இருக்கின்றன. ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சைலன்ஸ் சிக்னல் காட்டி கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications