கேட்ச்சை கோட்டைவிட்ட சிராஜ்.. 10 சிக்சர் விளாசி சாதனை படைத்த ஃபின் ஆலன்.. அலறிய குஜராத் அணி!
கொல்கத்தா: கேகேஆர் அணியின் அதிரடி வீரரான ஃபின் ஆலன் 33 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை முகமது சிராஜ் தவறவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட ஃபின் ஆலன், 35 பந்துகளில் 10 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் மொத்த குஜராத் அணியும் விரக்தி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால், இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை பெறும். அதற்கேற்ப டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ரஹானே - ஃபின் ஆலன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் 2 ஓவர்கள் அமைதியாக இருந்த ஃபின் ஆலன், சிராஜ் வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். பின்னர் ரபாடா வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர்கள் பறந்தது. பவர் பிளே ஓவர்களில் கேகேஆர் அணி நன்றாக ரன்கள் சேர்த்திருந்தாலும், பவர் பிளேவுக்கு பின்னர் தான் ஆட்டம் சூடுபிடித்தது. 7வது ஓவரை வீசிய ஹோல்டர் பந்தில் ஃபின் ஆலன் சிக்ஸ் அடிக்க முயற்சித்து பேட்டை ஓங்கினார்.
அது லாங் ஆனில் நின்றிருந்த முகமது சிராஜ் கைகளுக்கு சென்றது. ஆனால் சிராஜ் அந்த எளிய கேட்ச்சை தவறவிட, ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் ஃபின் ஆலன் எடுத்து கொண்டார். ரஷீத் கான் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். பின் ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களும், சாய் கிஷோர் வீசிய 10வது ஓவரில் 2 சிக்சர்களும் பறந்தன.
தொடர்ந்து அர்ஷத் கான் வீசிய 11வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் ஃபின் ஆலன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாய் கிஷோர் வீசிய 12வது ஓவரில் சிக்சர் அடிக்க முயற்சித்து ரஷித் கானிடம் கேட்ச்சானார். சிறப்பாக ஆடிய ஃபின் ஆலன் 35 பந்துகளில் 10 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசினார்.
ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஃபின் ஆலன் 2வது முறையாக இடம்பிடித்தார். ஃபின் ஆலனின் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் முகமது சிராஜ் கோட்டைவிட்ட ஒரு கேட்ச் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications