KL Rahul: 8வது சதம்.. ஒற்றை ஆளாக நின்று வித்தையை காட்டிய கேஎல் ராகுல்.. கம்பீர் கொடுத்த சிக்னல்!
ராஜ்கோட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 87 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8வது சதத்தை விளாசிய கேஎல் ராகுல், தனது பேட்டிங் சராசரியை 50க்கு மேல் கொண்டு சென்றிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 92 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 112 ரன்களையும், சுப்மன் கில் 56 ரன்களையும் சேர்த்தனர்.

இந்திய அணி 21.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் தடுமாறிய போது கேஎல் ராகுல் களம் புகுந்தார். இவர் களமிறங்கிய 2 ஓவர்களில் விராட் கோலியும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜாவுடன் இணைந்து கேஎல் ராகுல் நிதானமாக ரன்களை சேர்த்தார். முதற்கட்டமாக சுமார் 10 ஓவர்களாக அடிக்காமல் இருந்த பவுண்டரியை விளாசினார்.
இதன்பின் ஓவருக்கு 3 ரன்கள் எடுத்த போது, கூடுதலாக ஒரு ரன்னை சேர்க்க தொடங்கினார். முதல் 35 ரன்களை நிதானமாக எடுத்த கேஎல் ராகுல், அதன்பின் பேட்டிங்கில் தீவிரம் காட்டினார். சிறப்பாக ஆடிய அவர், 52 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 35 ஓவர்களுக்கு பின் கூடுதல் அதிரடி காட்டினாலும், 40 ஓவர்களுக்கு பின் டெய்லண்டர்களுடன் விளையாட சூழல் ஏற்பட்டது.
அதற்கேற்ப நிதிஷ் குமார் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோருக்கு ஆலோசனை கொடுத்து, கேஎல் ராகுல் பவுண்டரிகள் மூலமாக ரன்களை சேர்த்தார். 46 ஓவர்களுக்கு பின் மொத்த கட்டுப்பாட்டையும் அவரே எடுத்துக் கொண்டார். பின்னர் கைல் ஜேமிசன் வீசிய ஃபுல் டாஸ் பந்தை மிரட்டலாக சிக்சருக்கு அடித்து தனது 8வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கேஎல் ராகுல் அடிக்கும் 8வது சதம் இதுவாகும். ரோகித், கில், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது, மிடில் ஆர்டரில் ஒற்றை ஆளாக நின்று கேஎல் ராகுல் வித்தையை காட்டியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் இந்த இன்னிங்ஸ்க்கு பின் கேஎல் ராகுல் பேட்டிங் சராசரி 49.95ஆக இருந்தது. இந்த இன்னிங்ஸ்க்கு பின் 51ஆக உயர்ந்துள்ளது. கேஎல் ராகுல் பெவிலியன் நோக்கி நடந்து சென்ற போது, கம்பீர் நீண்ட நேரம் எழுந்து நின்று கைகளை தட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications