இவ்வளவு வெட்கமா.. சச்சின் முன்பே சாராவை பார்த்த சுப்மன் கில்.. மாட்டிவிட்ட ஜடேஜா!
லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் அருகில் இருக்கும் போது, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லை சக இந்திய வீரர்களான ஜடேஜா, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் கிண்டல் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அப்போது சுப்மன் கில் நீண்ட நேரமாக திரும்பி சாராவை பார்க்க, அதே நேரத்தில் சாராவும் சுப்மன் கில்லை பார்ப்பது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் ஒரே இடத்தில் இருந்த புகைப்படங்களை வெவ்வேறு நேரங்களில் பதிவேற்றி வந்தனர். அதேபோல் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்மன் கில் பேட்டியளித்த போதும், சாராவை டேட் செய்வதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

சுப்மன் கில் - சாரா காதல்
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது சுப்மன் கில் உத்தேச வீரர்களின் பட்டியலில் இருந்தார். அப்போது சுப்மன் கில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நேரில் பார்க்க கூட வராமல், சாராவுடன் சுற்றி திரிந்தார். இதன் காரணமாக சுப்மன் கில் உடனடியாக வெஸ்ட் இண்டீஸ் அழைத்து செல்லப்படாமல், மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
சுப்மன் கில் காதல்
இதன்பின் ஐபிஎல் தொடரின் போது சுப்மன் கில் காதல் விவகாரம் குறித்து பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக யாருடனும் காதலில் இல்லை. சிங்கிளாகவே இருக்கிறேன். தற்போது சூழலில் கிரிக்கெட்டில் மட்டுமே எனது கவனம் இருக்கிறது என்று தெரிவித்தார். இதனால் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையில் பிரேக் அப் நடந்துவிட்டதாக சொல்லப்பட்டது.
லண்டனில் சாரா
அதேபோல் சாரா டெண்டுல்கர் பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் காதலில் இருப்பதாகவும் சில தகவல் வெளியாகின. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் - ஜேம்ஸ் ஆண்டர்சன் டிராபி தொடருக்காக சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்தார். இதனிடையே லண்டனில் யுவராஜ் சிங்கின் தொண்டு நிறுவனத்திற்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சச்சின் குடும்பம்
இதில் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் பங்கேற்க, இந்திய அணி வீரர்களும் அங்கிருந்தனர். அப்போது சாரா டெண்டுல்கரை பார்த்து சுப்மன் கில் சிரித்து கொண்டே நடந்து சென்ற புகைப்படம் ட்ரெண்டாகியது. தற்போது, சச்சின், அஞ்சலி மற்றும் சாரா ஆகியோர் அமர்ந்திருக்க, இந்திய அணி வீரர்கள் அருகில் அமர்ந்திருந்தனர்.
ஜடேஜா கிண்டல்
அப்போது சுப்மன் கில் அந்தப் பக்கமாக திரும்பி அமர்ந்து வெட்கத்துடன் சாராவை எட்டிப்பார்க்க, அதனை அஞ்சலி பார்த்தார். இதன்பின் அஞ்சலி சிரிக்க, சக இந்திய வீரர்களான ஜடேஜா, ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் சுப்மன் கில்லை கிண்டல் செய்தனர். அதே நேரத்தில் சாரா - சுப்மன் கில் பார்த்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
-
17 இன்னிங்ஸ்.. 6 சதங்கள்.. 1086 ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளத் தொடங்கிய கேப்டன் சுப்மன் கில் -
மக்கள் கேப்டன் டூ ரியல் கேப்டன்.. வீழ்ந்த இடத்திலிருந்தே எழுந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரின் ‘மாஸ்’ கம்பேக் -
ஆப்கானை வெளுத்த சாய் சுதர்சன்.. 81 ரன்கள் விளாசி அசத்தல்.. இந்திய அணியில் 'நம்பர் 3' இடம் கன்பார்ம்? -
கேப்டனாக சுப்மன் கில் அசுர வேட்டை.. 15 இன்னிங்ஸ்களில் 6வது சதம் அடித்து மிரட்டல்.. நெகிழ்ந்த தந்தை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications