மைதானத்தில் கெட்டவார்த்தை பேசிய கேஎல் ராகுல்? சென்னையில் நடந்தது என்ன? ஜார்வோ போட்ட பரபர வீடியோ
சென்னை: 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின்போது ‛ஜார்வோ 69' எனும் இங்கிலாந்தின் பிராங்ஸ்டர் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இந்த வேளையில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் அவரை வெளியே செல்லும்படி கூற பயன்படுத்திய வார்த்தை தொடர்பான வீடியோவை ஜார்வோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 8 ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பிறகு இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து பிளேயர் ‛ஆப் தி மேட்ச் அவார்ட்டும்' பெற்றார்.
முன்னதாக இந்த போட்டி தொடங்கியபோது இருநாடுகளின் தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது. அதன்பிறகு இந்திய வீரர்கள் மைதானத்துக்கு ஃபீல்டிங் செய்ய தயாரானார்கள். அப்போது ஜார்வோ எனப் பெயர் பொறிக்கப்பட்ட இந்திய அணியின் ஜெர்சியை அணிந்திருந்த நபர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்தார்.அவர் சிராஜிடம் பேசியபடி மைதானத்தின் நடுவே சென்றார்.
அங்கு கேஎல் ராகுல் பேசி வெளியே செல்ல கூற பாதுகாவலர்கள் வந்து அவரை இழுத்து சென்றனர். மேலும் விராட் கோலியும் அந்த நபரை வெளியே செல்லும்படி எச்சரிக்கை செய்தார். இதனால் போட்டியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தீவிர கிரிக்கெட் ரசிகரான டேனியல் ஜார்விஸ் என்ற ஜார்வோ, கனடாவில் பிறந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். யூடியூப் ஒன்றை வைத்துள்ளார்.
இந்திய அணியின் தீவிர ரசிகரான இவர் இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மைதானத்துக்குள் புகுந்து தன்னையும் இந்திய அணி வீரர் எனக் கூறிக்கொண்டு மற்ற வீரர்களை போலவே களத்தில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டு தனது யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார். இதற்கு முன்பு 2021ல் செப்டம்பரில் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடியபோதும் அவர் இடையூறு செய்திருந்தார். அப்போது இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு களமிறங்கி ஃபீல்டிங் செட் செய்ய ஜார்வோ முயன்றார்.

இந்த தொடர் இடையூறுகளால் நடப்பு உலககோப்பை தொடர் போட்டிகளை மைதானத்தில் நேரடியாக பார்க்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின்போது ஜார்வோ மைதானத்துக்குள் நுழைந்தவுடன் இந்திய வீரர்கள் அவரிடம் பேசியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், கேஎல் ராகுல், ஜார்வோ மீது கோபம் கொண்டு அவரை இன்சல்ட் செய்யும் வகையிலான வார்த்தையை பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜார்வோ வெளியிட்ட அந்த வீடியோவில் முதலில் அவர் சிராஜ் அருகே சென்று பேசிவிட்டு மைதானத்துக்குள் செல்கிறார். அதன்பிறகு ஜார்வோவை பார்த்த கேஎல் ராகுல், ‛‛இது உங்களுக்கான இடம் இல்லை. அதுதான் உங்களின் இடம் (கேலரியை காட்டி). அங்கு செல்லுங்கள். எல்லா இடங்களுக்கும் வருவதை நிறுத்த வேண்டும்'' என கூறியுள்ளார். இந்த வேளையில் கேஎல் ராகுல், Go F**K Off எனும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications