லிவ்-இன் உறவில் ஹர்திக் பாண்டியா? இந்தியா பாகிஸ்தான் போட்டியில் கூடவே இருந்த பெண்! அட இதை பாருங்க
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக ஹர்திக் பாண்டியா மாறியுள்ளார். இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்டியா தனது கைகளில் கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ரூ.6.92 கோடி என்று தெரிய வந்தது. இதனால் ரிச்சர்ட் மிலே வாட்ச் தொடர்பாக ரசிகர்கள் தேட தொடங்கி இருக்கின்றனர்.
அதேபோல் துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியை இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகியான ஜஸ்மின் வாலியா நேரில் வந்து பார்த்தார். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தையே ஜஸ்மின் வாலியா பார்த்திருந்தார். அதேபோல் போட்டியின் போது ஜஸ்மீன் வாலியா பக்கம் கேமரா திரும்பிய போது, அவர் சில முத்தங்களை கொடுத்து கவனத்தை ஈர்த்தார்.

ஹர்திக் பாண்டியாவும், ஜஸ்மீன் வாலியா நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால், ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை பிரிவதற்கு முன்பாகவே ஜஸ்மீன் வாலியாவுடன் காதலில் இருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி நடாஷா ஸ்டான்கோவிக் - ஹர்திக் பாண்டியா இடையில் விவாகரத்து நடைபெற்றது.
ஆனால் அதற்கு முன்பிருந்த இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா ஜஸ்மின் வாலியாவை பின் தொடர்ந்து வருகிறார். இதனால் ஹர்திக் பாண்டியா - நடாஷா இடையிலான திருமண முறிவுக்கும் ஜஸ்மின் வாலியாவுடனான காதலே காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீப நாட்களாக ஜஸ்மின் வாலியா இந்தியாவில் அதிக நேரங்களை செலவிட்டு வருகிறார்.
டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ஹர்திக் பாண்டியா ஸ்பெயினுக்கு விடுமுறை சென்ற போது, ஜஸ்மின் வாலியாவும் அங்கிருந்தார். அதன்பின் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட ஹர்திக் பாண்டியா கொழும்பு சென்ற போது, ஜஸ்மின் வாலியா அழைத்து செல்லப்பட்டார். இதன்பின் தொடர்ச்சியாக ஹர்திக் பாண்டியாவுடன் ஜஸ்மின் வாலியா பயணித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பாக ஜஸ்மின் வாலியா பதிவிட்ட புகைப்படத்தில் கூட ஹர்திக் பாண்டியாவின் டாட்டூ இருந்தது. அதனை மறைக்க ஜஸ்மின் வாலியா மறந்ததை ரசிகர்கள் கமெண்ட் செய்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா - ஜஸ்மின் வாலியா இருவரும் தற்போது லிவ்-இன் உறவில் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நடாஷா ஸ்டான்கோவிக் உடன் லிவ்-இன் உறவில் இருந்து ஹர்திக் பாண்டியா திருமணம் செய்து கொண்டார். இன்னும் சொல்லப் போனால் லிவ்-இன் உறவின் போது நடாஷா கருவுற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் அகஸ்தியா 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிறந்தார்.
இதனால் மீண்டும் ஹர்திக் பாண்டியா தனது காதலியான ஜஸ்மீன் வாலியாவுடன் லிவ்-இன் உறவில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுவரை இருவர் தரப்பிலும் தங்களுக்கு இடையிலான நட்பையோ, உறவையோ உறுதி செய்யவில்லை. இருந்தாலும் திருமணம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications