"அடப்பாவிகளா"! 3ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கு தோனி எத்தனை லட்சம் ஃபீஸ் கட்டுகிறார் தெரியுமா?
ராஞ்சி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸிவாவிற்கு பள்ளி கட்டணமாக தோனி எவ்வளவு பணம் செலுத்துகிறார் தெரியுமா?
கிரிக்கெட் வீரர் தோனி.. மஞ்சள் படையின் மாஸ் ஹீரோ.. விசில் போடு.. என லட்சோப லட்ச ரசிகர்களை கொண்டவர். இவர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் 16 ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னுடன் படித்த தோழியான சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஸிவா என்ற மகள் பிறந்தாள். ஸிவா தோனிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. இதில் அவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். தோனி பற்றிய செய்தி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம்தான். அதிலும் அவர் தற்போது எல்ஜிஎம் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இதற்காக அவர் தனது மனைவி, மகளுடன் சென்னை வந்திருந்தார். அந்த படவிழாவில் பேசிய போது எனக்கு கூட தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது. ஆனால் எனது மனைவிக்கு தெரியும் என்றார். அது போல் இவர் ஓய்வு நேரத்தில் என்ன செய்வார், இவருக்கு பிடித்தமான வீட்டு விலங்குகள் என ரசிகர்கள் தோனி என்ற செய்தியை கண்டாலே விட மாட்டார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு ஷாக்கிங் செய்தி வந்துள்ளது. அதாவது தோனியின் மகள் ஸிவாவிற்கு ஆண்டுக்கு பள்ளிக்கு கட்டணம் மட்டும் 1 லட்சத்திற்கு மேல் செலுத்துகிறாராம். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள டாரியன் வேர்ல்டு பள்ளியில் (Taurian World School) ஸிவா படித்து வருகிறார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் ஸிவாவிற்கு ஆண்டு கட்டணமாக ரூ 2.75 லட்சம் செலவிடுகிறாராம். அதாவது மாதத்திற்கு ரூ 23 ஆயிரமாம். இதே பள்ளியில் போர்டிங் வசதியும் இருக்கிறது. இதில் ஆண்டு கட்டணமாக ரூ 4.40 லட்சம் வசூலிக்கிறார்கள். தோனியின் ஆண்டு வருமானம் ரூ 1000 கோடி என்கிறார்கள். ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜிக்கே பெற்றோர் லட்சக்கணக்கில் செலவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், நான் 10ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்தேன். அங்கு எனக்கு பள்ளி கட்டணம் எவ்வளவு என கணக்கிட்டேன். வெறும் 850 ரூபாய்தான். ஆனால் கார்த்தியின் மகள் ப்ரீகேஜி படிக்கிறார். அவர் எல்கேஜியும் இல்லை, யூகேஜியும் இல்லை. இந்த ப்ரீகேஜிக்கு ரூ 2.5 லட்சம் செலவு செய்கிறார்.
இத்தனைக்கும் இந்த ப்ரீகேஜியில் ஒன்னுக்கு ரெண்டுக்கு போகத்தான் சொல்லி தருவார்கள். இதுக்கு போய் ரெண்டு லட்சமா... அடப்பாவிகளா நீங்க நல்லாயிருப்பீங்களா என ஆவேசத்துடன் பேசியிருந்தார். சிவக்குமாரின் இந்த பேச்சு வைரலான நிலையில் தோனி மகளுக்கு இரண்டே முக்கால் லட்சம் கல்விக் கட்டணம் செலுத்துகிறார். 3ஆம் வகுப்புக்கு 2.75 லட்சம் கூட பரவாயில்லை, ஆனால் ப்ரீகேஜிக்கு 2.50 லட்சமா என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications