Memes: "மழை நிற்பதற்குள் ஒரு ஸ்விம்மிங்கை போட்டுட்டு வரேன் வாத்தியாரே" தெறிக்கும் ஆர்சிபி மீம்ஸ்!
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கும், கேகேஆர் அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
கலகலப்பு படத்தில் கார் சேஸிங்கின் போது பாவா பாலகிருஷ்ணன், "வாத்தியாரே.. அப்படியே காரை வீட்டு பக்கம் திருப்புங்க.. சுகர் மாத்திரை மறந்துட்டேன்.. போட்டுட்டு வந்துறேன்" என்பார். இதனால் சந்தானம், "சுகர் வந்தவன்.. பிபி வந்தவனெல்லாம் வச்சி சேஸிங் செய்றேன்" என்பார். அதில் பாவா பாலகிருஷ்ணனை டிம் டேவிட்டாகவும், சந்தானத்தை விராட் கோலியாகவும் மாற்றி, வாத்தியாரே.. இந்த மழை எப்போ நிற்கும் என்று கேட்க, அதற்கு விராட் கோலி, ஏன்.. மழை நின்றா கேகேஆர் அணியை வென்று 2 புள்ளி எடுத்துடலாமா நண்பா.. என்று பதில் கேள்வி கேட்க, "அதற்கு டிம் டேவிட், அதெல்லாம் இல்ல வாத்தியாரே.. மழை நிற்பதற்குள் ஒரு ஸ்விம்மிங்கை போட்டு வந்துரலாம்னு பாக்குறேன்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயோ முடியலைடா சாமி ரகம்.

திருப்பாச்சி படத்தில், விஜயிடம் அவரின் நண்பர், "உன் ரூட்டுதான் கரெக்ட்.. 20 பேரை கொலை பண்ணிட்டு போலீஸ்-க்கு ஆப்பு வச்சியே.. போலீஸ் கமிஷனருக்கு கால் பண்ணி சவால்விட்டியே.. எல்லாம் சரி" என்று சொல்லுவார்.. அதில் வரும் விஜயாக சிஎஸ்கே அணியையும், நண்பராக கேகேஆர் அணியையும் மாற்றி, "மாப்ள.. நாடு இருக்க நிலைமைல ஐபிஎல் தொடரெல்லாம் நமக்கு தேவை தானானு சொன்னல.. உன் ரூட்டுதான் கரெக்ட்.. இப்போ ஐபிஎல் தேவையா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

சிவப்பு, மஞ்சள், பச்சை படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் அடி வாங்குவதை பார்த்து சித்தார்த் உற்சாகமாக இருப்பார். அதில் வரும் ஜிவி பிரகாஷ் குமாராக கேகேஆர் அணியையும், சித்தார்த்தாக ஸ்ரேயாஸ் ஐயரையும் மாற்றி, கேகேஆர் அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து எலிமினேட் ஆவதை ஜாலியாக ஸ்ரேயாஸ் ஐயர் பார்ப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் ரகம்.

பாமக மாநாட்டில் அன்புமணி ராமதாஸை அருகில் வைத்து கொண்டு ராமதாஸ், "இதெல்லாம் நடக்காது தம்பி.. நடக்காது கண்ணு" என்று கூறினார். அதனை பில் சால்ட், "ஈ சாலா கப் நம்தே" என்று சொல்லியதை அப்படியே மாற்றி, அன்புமணியை பில் சால்ட்-டாகவும், ராமதாஸை மும்பை அணியாகவும் மாற்றி, "அதெல்லாம் நடக்காது தம்பி.. நடக்காது கண்ணு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஓஜி கேங்ஸ்டர் என்ட்ரி ரகம்.














Click it and Unblock the Notifications