யாருங்க அவரு? சிராஜ் வரிசையாக விக்கெட் எடுத்ததும்.. டிரெண்டான அந்த "லங்கன்" பெயர்! ஏன்? என்ன காரணம்?
சென்னை: இலங்கை அணி இன்று இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும் ட்விட்டரில் முக்கியமான பெயர் ஒன்று டிரெண்டானது.
இந்தியா இலங்கை இடையிலான ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. வெறும் 50 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆல் அவுட் ஆகி உள்ளது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல்(வ), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்று இந்திய அணியில் ஆடுகிறார்கள்.
விக்கெட்: இதில் தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார்.
அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.
அதன்பின் அடுத்து மீண்டும் போட்ட ஓவரில் கூடுதலாக ஒரு விக்கெட் எடுத்தார். இன்னொரு பக்கம் தான் வீசிய கடைசி 13 மற்றும் 16வது ஓவரில் தலா 1 மற்றும் 2விக்கெட்களை பாண்டியா எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 50க்கு ஆல் அவுட் ஆனது.
Mohammed Siraj after taking 6 wickets against Sri Lanka in Asia Cup finals and helping dismiss entire team for 50 All out - Lowest ever ODI score against India!
— Vishal Verma (@VishalVerma_9) September 17, 2023
Unplayable spell from Miyan bhai, someone please check on Daniel Alexander! 💀#INDvSL #Siraj pic.twitter.com/kpdXItUP7J
சர்வதேச அணி இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த மிக குறைந்த ஸ்கோர் ஆகும் இது.
50 ரன்கள் இலங்கை கொழும்பு இன்று புதிய ரெக்கார்ட்.
58 ரன்கள் - வங்கதேசம் - 2014
65 ரன்கள் -ஜிம்பாபே - 2005
73 ரன்கள் - இலங்கை - 2023
1990 இல் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக வக்கார் யூனிஸின் 6/26 என்ற ரெக்கார்டை சிராஜின் 6/21 ரெக்கார்ட் இன்று முறியடித்துள்ளது.
Indian fans to Daniel Alexander right now #INDvSL pic.twitter.com/RTbmFMYNum
— Sameer Allana (@HitmanCricket) September 17, 2023
டிரெண்ட்: இலங்கை அணி இன்று இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததும் ட்விட்டரில் முக்கியமான பெயர் ஒன்று டிரெண்டானது. இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் டேனியல் அலெக்சாண்டர் என்பவரின் பெயர் டிரெண்டானது.
இலங்கையை சேர்ந்த சாதாரண கிரிக்கெட் ரசிகர் மற்றும் விமர்சகர்தான். ஆனால் இவர் இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அதிலும் இந்தியர்களை மிக கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்ய கூடியவர்.
Daniel Alexander watching Siraj spell #INDvSL pic.twitter.com/pnadDlRhHj
— aman (@bilateral_bully) September 17, 2023
அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்களை மிக கடுமையான வார்த்தைகளில் பல முறை விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 36 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி கடுமையான விமர்சனங்களை வைத்தவர்தான் டேனியல் அலெக்ஸாண்டர்.
இந்த நிலையில்தான் தற்போது இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை வைத்து நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications