கடைசி 11 இன்னிங்ஸ்.. மும்பை சோலியை முடித்த ரோகித் சர்மா.. நடவடிக்கை எடுப்பாரா ஹர்திக் பாண்டியா?
டெல்லி: ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஜாம்பவான் வீரரான ரோஹித் சர்மா கடைசியாக ஆடிய 11 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். இதனால் டெல்லி அணிக்கு எதிராக இன்றிரவு நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மாவை பெஞ்ச் செய்தால் மட்டுமே மும்பை அணி வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்றிரவு நடக்கவுள்ள போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பலம் வாய்ந்த டெல்லி அணி விளையாடவுள்ளது. இந்த சீசனில் 5 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 10வது இடத்திலும், மும்பை அணி 9வது இடத்திலும் இருக்கிறது. ஆனால் கோப்பையை வெல்லாத டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் உச்சத்தில் இருக்கின்றன.

மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் இருக்கிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால், மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான கனவை இழந்துவிட வேண்டியது தான். மும்பை அணியின் வீரர்கள் ஜாம்பவான்களாக இருந்தும், அந்த அணியில் நடக்கும் அரசியலே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறது.
ஒரு போட்டியில் சூர்யகுமார் யாதவ் சொதப்பினால், மற்றொரு போட்டியில் திலக் வர்மா சொதப்புகிறார். ரோஹித் சர்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை. கடைசியாக அவர் ஆடிய 11 ஐபிஎல் போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். மற்ற அணிகளில் இப்படியொரு ஃபார்மில் வீரர் இருந்திருந்தால், அவரை அந்த அணி கைவிட்டு சென்றிருக்கும்.
ஆனால் மும்பை அணி ரோஹித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து வருகிறது. ஆனால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ரோஹித் சர்மாவை பெஞ்ச் செய்ய வேண்டும். அப்படி பெஞ்ச் செய்தால் மட்டுமே மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் நிலை உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அளவில் சிறியதான டெல்லி மைதானத்தில் பெரிய ஸ்கோரை எளிதாக விளாச முடியும். இதனால் டெல்லி அணியின் பவுலிங்கை சமாளித்து மும்பை அணி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டுமென்றால், அந்த அணிக்கு விக்கெட்டுகள் அத்தியாவசியமானதாகும். இதனால் தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை மும்பை அணி இழந்தால், அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதிதான்












Click it and Unblock the Notifications