முழு முட்டாள்தனம்.. கோலி செஞ்சுரிக்காக.. சுயநலமாக ஆடுகிறாரா? தாக்கிய பாக். வீரருக்கு சவுக்கடி பதில்!
சென்னை: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை அடித்ததை 'சுயநலம்' என்று விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, ஹபீஸின் கூற்று சுத்த முட்டாள்தனம் என்று வாகன் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா வெற்றி; நேற்று முதல்நாள் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கூட இந்திய அணி எளிதாக வென்றது. இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடினர்.
இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது. 50 ஓவரில் 326/5 ரன்கள் எடுத்து இந்திய அணி மைதானத்தையே அதிர வைத்தது. முக்கியமாக கடினமான பிட்சில் 121 பந்தில் 101 ரன்கள் எடுத்தனர். அதேபோல் 87 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் விக்கெட் விழாமல் இரண்டு பேருமே நிலைத்து ஆடி 326-5 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தனர்.
இதையடுத்து இறங்கிய தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது. ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு பிரஷர் போட்டார். 9 ஓவரில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். இன்னொரு பக்கம் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 83-10 ரன்களுக்கு அவுட் ஆனது
கோலி சதம்: கடினமான இந்த பிட்சில் கோலி சதம் அடித்தும் கூட அவரை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். 2023 உலகக் கோப்பை போட்டியில் கோலி சுயநலமாக ஆடுவதாக சிலரால் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
அணியின் ரன் ரேட் பற்றி கவலை இல்லாமல் அவர் செஞ்சுரி வேண்டும் என்று ஆடுகிறார் என்று விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்படுகின்றன. முக்கியமாக நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அவர் சதம் 121 பந்தில் 83 ஸ்டிரைக் ரேட்டில் 101 அடித்தது, அதற்கு முன் வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த சதம், நியூஸிலாந்துற்கு எதிராக அவர் அடித்த 95 ரன்கள் ஆகியவைதான் இந்த விமர்சனங்களுக்கு காரணம். இந்த போட்டிகளில் அவர் சதம் அடித்தாலும்.. இந்தியா வென்றாலும் கூட கோலி சுயநலமாக ஆடியதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
முகமது ஹபீஸ் விமர்சனம்; இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை அடித்ததை 'சுயநலம்' என்று விமர்சனம் செய்து இருந்தார். அவர் தனது பேச்சில், விராட் கோலியின் பேட்டிங்கில் சுயநல உணர்வைப் பார்த்தேன், இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49 வது ஓவரில், அவர் தனது சொந்த சதத்தை எட்ட ஒரு சிங்கிள் எடுக்க நினைத்தார், அவர் அணியை முதலில் வைக்கவில்லை. இது மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்.
தரமான பதிலடி; இதற்கு, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தரமான பதிலடி கொடுத்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் அபாரமான கிரிக்கெட் விளையாடி 8 அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. கோலியிடம் இப்போது 49 டன்கள் உள்ளது மற்றும் அவரது கடைசி ஆட்டம் ஒரு கடினமான ஆடுகளத்தில் ஆடப்பட்ட ஆங்கர் ரோல் இன்னிங்ஸ் ஆகும். அவரது அணி 200 ரன்களுக்கு மேல் வெற்றி பெற்றது. இதற்கு காரணம் அவரின் இன்னிங்ஸ். அப்படி இருக்க உங்களின் இந்த பேச்சு முழு முட்டாள்தனம், என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications