மஹிரா சர்மாவுடன் காதலில் இருக்கும் இந்திய வீரர் முகமது சிராஜ்? மீண்டும் மீண்டும் சிக்குறாங்களே!
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழ்பெற்ற டிவி நடிகை மஹிரா சர்மா மற்றும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. நேற்றிரவு இருவரும் ஒரே உணவகத்தில் இருந்து தனித் தனியாக வெளியில் வரும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சளர் முகமது சிராஜ். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முகமது சிராஜ் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படியான சூழலில் பாலிவுட் நடிகை மஹிரா சர்மாவுடன் முகமது சிராஜ் காதல் உறவில் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் பாலிவுட் நடிகை மற்றும் இந்திய வீரர் டேட்டிங் செய்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது கூட பாலிவுட் மாடலான மஹிகா சர்மாவுடன் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காதலில் இருக்கிறார். நேற்றிரவு உணவகம் ஒன்றில் இருந்து முகமது சிராஜ் மற்றும் பாலிவுட் நடிகை மஹிரா சர்மா இருவரும் தனித்தனியாக வெளியில் வந்துள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
மஹிரா சர்மா மற்றும் முகமது சிராஜ் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை. மஹிரா சர்மாவை பொறுத்தவரை பிக் பாஸ் 13வது சீசனில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். இதன்பின் அவருக்கு பாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதேபோல் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருமே அமைதி காத்து வருகின்றனர். இதுவே ரசிகர்களின் விவாதத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய நாள் முதலே முகமது சிராஜ் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கியதே கிடையாது. எப்போதும் பொது வெளியில் மிகவுன் ஒழுங்குடன் சிராஜ் நடந்து கொள்வார்.
இதுவரை ரசிகர்களிடம் கூட கொந்தளித்ததே இல்லை. இதனால் திடீரென முகமது சிராஜ் நடிகை ஒருவருடன் இணைத்து பேசப்படுவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டு முதலே மஹிரா சர்மாவுடன் முகமது சிராஜ் பெயர் தொடர்ந்து இணைத்து பேசப்பட்டு வருவதால், ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications