நல்ல காலம் பிறக்குது.. இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி? அஜித் அகர்கர் போடும் கணக்கு!
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு பும்ரா தேர்வாகி இருப்பதால், நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் பும்ரா இடத்தில் முகமது ஷமியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி மற்றும் நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்களை ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து டி20 தொடர் தொடங்கி ஐபிஎல் தொடர் வரை தொடர்ந்து 4 மாதங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அவர்களுக்கு ஓய்வு அளிக்க தேர்வுக் குழு முடிவு எடுத்துள்ளது. குறிப்பாக பும்ராவுக்கான வேலைப் பளுவை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளித்துவிட்டு, அந்த இடத்தில் முகமது ஷமியை விளையாட வைக்க கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பும்ரா மட்டுமல்லாமல் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இதனால் சுமார் ஓராண்டுக்கு பின் முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளார். கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி விளையாடி இருந்தார். 2023ஆம் ஆண்டுக்கு பின் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட முகமது ஷமி விளையாடவில்லை.
அண்மையில் நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடிய முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரிலும் 6 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். சிறந்த ஃபார்மில் முகமது ஷமி இருப்பதால், இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications