இதுதான் தோனி.. ஜார்க்கண்ட் அணியை உச்சத்திற்கு கொண்டு சென்ற தல.. இனி யாராலயும் விமர்சிக்க முடியாது!
மும்பை: சையத் முஷ்டாக் அலி தொடரை முதல்முறையாக ஜார்க்கண்ட் அணி வென்றதற்கு பின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி முக்கிய பங்காற்றி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்காக ஆடிய அத்தனை வீரர்களின் புள்ளி விவரங்களையும் தோனி விரல் நுனியில் வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் சையத் முஷ்டாக் அலி தொடரை ஜார்க்கண்ட் அணி முதல்முறையாக வென்று புதிய வரலாறு படைத்தது. சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணி விளையாடிய 11 போட்டிகளில் 10ல் வென்றது. வலிமையான அணிகளாக பார்க்கப்பட்ட டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட அத்தனை அணிகளையும் ஜார்க்கண்ட் அணி வீழ்த்தியது.

அதிலும் சிறப்பாக ஆடிய கேப்டன் இஷான் கிஷன் 10 இன்னிங்ஸில் 517 ரன்களை குவித்துள்ளார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் அணியின் வெற்றிக்கு தோனியும் ஒரு அணிலாக உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சையத் முஷ்டாக் அலி தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஷபாஸ் நதீம் மற்றும் சவுரப் திவாரி ஆகியோர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
அதேபோல் ரதன் குமார் என்பவரை ஜார்க்கண்ட் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமனம் செய்திருக்கின்றனர். அதேபோல் சன்னி குப்தா என்பவர் பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரு ஒப்பந்தமும் தோனியின் அறிவுறுத்தலின் கீழ் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஷபாஸ் நதீம் பேசுகையில், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே தோனியிடம் சில அட்வைஸ்களை பெற்றோம். குறிப்பாக பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக ஆலோசித்தோம். அதேபோல் ஜார்க்கண்ட் அணியுடன் பயணிக்க தோனியும் ஆர்வமாக இருந்தேன். ஜார்க்கண்ட் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.
இரு ஜாம்பவான் வீரர் மாநில அணி மீது கவனம் கொண்டிருப்பது நல்ல விஷயம். இந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணி ஆடிய ஒவ்வொரு போட்டியையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். ஒவ்வொரு வீரரின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பாகவ்யும் எங்களுடன் விவாதித்தார். உள்ளூர் வீரர்களின் புள்ளி விவரங்கள் அத்தனையையும் தோனி விரல் நுனியில் வைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.
இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தோனி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அம்மாநில கிரிக்கெட் அணிக்காக பெரியளவில் எந்தப் போட்டிகளிலும் விளையாடியதே இல்லை. இது தோனி மீது ஒரு விமர்சனமாகவே இருந்து வந்தது. தற்போது ஓய்வுக்கு பின் ஜார்க்கண்ட் அணியுடன் இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications