ருதுராஜ் பந்தை இப்படி விளாசிட்டாரே.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டுட்டு வாங்க ஹசி.. தோனி கொடுத்த ரியாக்சன்!
சென்னை: சிஎஸ்கே அணியின் ரீயூன் நிகழ்ச்சியின் போது ருதுராஜ் கெய்க்வாட் வீசிய பந்தை ஜாம்பவான் வீரர் மைக் ஹசி கவர்ஸ் திசையில் சிக்சருக்கு விளாசியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக நின்றிருந்த தோனியின் ரியாக்சன் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களும், தற்போதைய வீரர்களும் இணைந்து சிறியளவில் பயிற்சி மேற்கொண்டனர். சிஎஸ்கே ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, டுவைன் பிராவோ, மைக் ஹசி, முரளி விஜய், அம்பாதி ராயுடு, பத்ரிநாத், ஹெய்டன், ஹர்பஜன் சிங், ஜகாட்டி, பாலாஜி உள்ளிட்டோர் வந்தனர்.

அதேபோல் சிஎஸ்கே அணியின் முன்னாள் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக முரளிதரன், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல் உள்ளிட்டோர் மைதானத்திற்கு வந்த போது ரசிகர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. இதன்பின் சிஎஸ்கே அணியின் வீரர்களும், ஜாம்பவான்களும் பிரெண்ட்லியாக சில ஓவர்கள் விளையாடினர்.
அப்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங் செய்ய வந்தார். விக்கெட் கீப்பராக தோனி நிற்க, மைக் ஹசி பேட்டுடன் களமிறங்கினார். அப்போது ருதுராஜ் கெய்க்வாட் வீசிய முதல் பந்தையே மைக் ஹசி கவர்ஸ் திசையில் தூக்கி சிக்சருக்கு விளாசி தள்ளினார். தொடர்ந்து 2வது பந்தும் சிக்சருக்கு பறந்தது. மைக் ஹசி இன்னும் பழைய ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
அதிலும் தோனி கொடுத்த ரியாக்சன் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி இருக்கிறது. இதனால் மைக் ஹசியை மீண்டும் சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிவித்து களமிறக்கிவிடலாம் என்று ரசிகர்கள் ஜாலியாக விவாதித்து வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே பழைய வீரர்களுடன் தோனி கூடுதல் உற்சாகமாக இருந்த வீடியோக்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் 6வது ஐபிஎல் கோப்பை லோடிங் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். இதன்பின் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ரசிகர்களை உற்சாகப்படுத்த தொடங்கியுள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications