தோனி மப்டில வந்து அடிச்ச மாதிரி.. அப்படியொரு ஹெலிகாப்டர் ஷாட்.. KKR அணியை கதறவிட்ட முகுல் சவுத்ரி!
கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. லக்னோ அணியின் வெற்றிக்கு 7வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய முகுல் சவுத்ரி ஒரே காரணமாக அமைந்துள்ளார். கடைசி 53 ரன்களில் 52 ரன்களை முகுல் சவுத்ரி விளாசி அசத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் முகுல் சவுத்ரி ஆடிய ஷாட்கள் தோனியின் ஷாட்களை போலவே அமைந்திருந்தது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரஞள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

லக்னோ அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து தடுமாறி வந்தது. அப்போது முகுல் சவுத்ரி - ஆவேஷ் கான் கூட்டணி மட்டுமே களத்தில் இருந்தது. முகுல் சவுத்ரி இளம் வீரர் என்பதால், கேகேஆர் அணியின் வெற்றி உறுதியானது என்று பார்க்கப்பட்டது. அப்போது வைபவ் அரோரா பந்தில் முகுல் சவுத்ரி தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி சிக்சருக்கு பறக்கவிட்டார்.
இதன்பின் கார்த்திக் தியாகி வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர் அடிக்க, ஆட்டம் சூடுபிடித்தது. பின்னர் கேமரூன் க்ரீன் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் பந்தில் 1 ரன் எடுத்து ஆவேஷ் கான் மறுபக்கம் சென்றார். தொடர்ந்து 2வது பந்தில் முகுல் சவுத்ரி சிக்ஸ் அடிக்க, அடுத்த 2 பந்துகள் டாட் பால்களாக மாறியது.
இதனால் கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது, 5வது பந்தில் சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து முகுல் சவுத்ரி லக்னோ அணியை கரைசேர வைத்தார். மொத்தமாக 27 பந்துகளில் முகுல் சவுத்ரி 7 சிக்ஸ், 2 பவுண்டரி விளாசி அதிர வைத்தார். முகுல் சவுத்ரியின் பெரும்பாலான ஷாட்கள் தோனியின் ஸ்டைலில் இருந்தது.
இதனால் தோனி மப்டியில் வைத்து ஆடியதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே லக்னோ அணியின் பயிற்சியாளர் லாங்கர், முகுல் சவுத்ரி நம்பர் 7ல் வந்து அதிரடியாக ஆடுவார் என்று கூறி இருந்தார். அவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் முகுல் சவுத்ரி அசத்தலான ஆட்டத்தை ஆடி லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications