23 பந்துகளில் 82 ரன்கள்.. மும்பை அணியின் ஸ்டார் பாய்னா சும்மாவா.. சாதனை சதம் அடித்த திலக் வர்மா!
அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா 33 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார். ஆனால் அடுத்த பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடிய திலக் வர்மா, 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசி வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய திலக் வர்மா 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் திலக் வர்மாவை ரசிகர்கள் மீண்டும் ஸ்டார் பாய் ஃபார்முக்கு வந்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் 45 ரன்களுக்கு மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த திலக் வர்மா நிதானமாக ரன்களை சேர்த்தார். ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டை கொடுக்க கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் ஆடினார்.இதனால் திலக் வர்மா 22 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால் அதன்பின் திலக் வர்மா ஆட்டம் வேறு மாதிரி உருவெடுத்தது.
பவுண்டரிகளை விளாச தொடங்கிய திலக் வர்மா, 15 ஓவர்களுக்கு பின் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் 33 பந்துகளில் திலக் வர்மா அரைசதத்தை எட்டினார். கடைசியாக ஆடிய 15 டி20 இன்னிங்ஸில் திலக் வர்மாவின் முதல் அரைசதமாக இது அமைந்தது. தொடர்ந்து அசோக் சர்மா வீசிய 18வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசி தள்ளினார்.
இதையடுத்து கடைசி ஓவரிலும் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசி சதத்தை எட்டினார். இதன் மூலமாக திலக் வர்மா 23 பந்துகளில் 82 ரன்களை விளாசி வரலாரு படைத்துள்ளார். இதன் மூலமாக மும்பஒஇ அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் திலக் வர்மா படைத்தார். அதேபோல் நம்பர் 5 வரிசையில் களமிறங்கி சதம் விளாசிய 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதன் மூலமாக 2008 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சதம் விளாசிய சனத் ஜெயசூர்யாவின் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார். அந்தப் போட்டியிலும் ஜெயசூர்யா 45 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் தொடரில் சச்சினுடன் இணைந்து ஜெயசூர்யா ஆடிய முதல் ஆட்டம் அதுவாகும். அந்த உற்சாகத்தில் சிஎஸ்கே அணியை வெளுத்து கட்டினார்.


Click it and Unblock the Notifications
