கவுதம் கம்பீர் அல்ல.. கேப்டன்சியில் ஹர்திக், பும்ராவை பழிவாங்கிய அந்த நிர்வாகி.. காரணம் என்ன?
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரே வாரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இருவருமே ஆர்வமாக இருந்த போது, திடீரென ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு வகையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாகவும் நியமனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவருமே இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கிடையாது.

சுப்மன் கில் ஆக்ரோஷமான வீரர் என்றாலும், வெளிநாடுகளில் இதுவரை ரன்கள் அடித்து டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை கூட அவரால் பிடிக்க முடியவில்லை. ரிஷப் பண்ட் கேப்டன்சிக்கு கொஞ்சம் கூட பொறுத்தமில்லாத வீரர். இதனால் இந்திய டெஸ்ட் அணி மீண்டும் சரிவை சந்திக்கப் போவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதனிடையே ரசிகர்கள் இடையே இன்னொரு விவாதமும் நடந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார்.
அதற்கு ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பைக்கு பின் இதுவரை ஒரு போட்டியை கூட ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக மிஸ் செய்யவில்லை. தற்போது காயம் மற்றும் ஃபிட்னஸ் ஆகிய காரணங்களை கொண்டு டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பு பும்ராவுக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வெளிநாடு மைதானங்களில் பும்ராவுக்கு இருக்கும் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவை விராட் கோலிக்கு நிகரான ஒன்றாகும். 2 ஓவர்களிலேயே பிட்சின் தன்மை, எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை துல்லியமாக கணக்கிடுவார். இதனால் பும்ராவுக்கு கேப்டன்சி பொறுப்பை வழங்கி சுப்மன் கில்லை தயார் செய்வதே சரியான முடிவாக இருக்கும்.
ஆனால் ஹர்திக் பாண்டியாவை போல் பும்ராவும் மொத்தமாக புறந்தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு பின் பலரும் கவுதம் கம்பீர் இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தான் இதுபோன்ற முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதாக தெரிய வந்துள்ளது. அவர் தெர்வுக் குழு தலைவராக பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, தனக்கு சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் இந்திய அணி விவகாரங்களில் நடக்கும் மாற்றங்களுக்கு அஜித் அகர்கரே காரணம் என்று பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications