IPL Match: அவுட்டா, நாட் அவுட்டா? ஆர்சிபி வீரர் பிடித்த கேட்ச்! முதல் மேட்சிலேயே சர்ச்சை! நெட்டிசன்ஸ் காரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் அணியான பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டது. முன்னதாக இந்த போட்டியில் சால்ட் பிடித்த ஒரு கேட்ச் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஹெண்ட்ரிச் கிளாசன் அடித்த ஒரு பந்தை டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே சால்ட் பிடித்தார். இதற்கு நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் இது அவுட் இல்லை என்றும், பேக் சைட் புட்டேஜ் பார்த்தால் இதில் தெளிவாக தெரியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்ச்ர்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

RCB Catch in IPL 2026

துள்ளி குதித்து கேட்ச்

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார்.

முன்னதாக இந்த போட்டியில் சால்ட் பிடித்த ஒரு கேட்ச் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. சால்ட் மொத்தம் 3 கேட்ச்களை பிடித்தார். இதில் ஹெண்ட்ரிச் கிளாசன் அடித்த ஒரு பந்தை டீப் மிட் விக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே சால்ட் பிடித்தார். துள்ளி குதித்து பந்தை படித்த சால்ட் நிலை தடுமாறி பவுண்டரி லைனில் கால் பட்டது போல தெரிந்தது.

விக்கெட்டா? அல்லது சிக்சரா?

விக்கெட்டா இல்லை சிக்சரா என்று குழப்பம் ஏற்பட்டதால் மூன்றாவது நடுவருக்கு என்று முடிவு அனுப்பப்பட்டது. மூன்றாவது நடுவர் ஆய்வுக்கு பிறகு அவுட் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், ரீப்ளேவில் சால்ட்டின் கல் பவுண்டரி லைனை டச் செய்வது போல இருந்தது. எனினும் அவுட் என்று மூன்றாவது நடுவரின் முடிவு வந்ததால் ஐதராபாத் ரசிகர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

நெட்டிசன்கள் காரசாரம்

ஐதராபாத் அணிக்கு இந்த விக்கெட் விழுந்தது போட்டியில் திருப்பு முனையாக இருந்தது. இதனால், சால்ட் பிடித்த அந்த கேட்ச் தொடர்பாக சமூக வலைத்தளங்க்ளில் ரசிகர்கள் அதிகம் விவாதித்து வருகிறார்கள். இது அவுட் இல்லை என்றும், பேக் சைட் புட்டேஜ் பார்த்தால் இதில் தெளிவாக தெரியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். சில நெட்டிசன்கள், நடுவருக்கு கண் தெரியுமா? கண் தெரியாதா? என்று கேட்ட்டு சாடியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+