வெறும் 4% வாய்ப்பு.. உலகக் கோப்பையில் நாக் அவுட் ஆகும் முதல் பெரிய டீம்.. இந்த டீம் வேற அவுட் ஆகுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 உலகக் கோப்பையில் செமி பைனல் செல்ல போகும் அணிகள் எவை எவை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பை விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் பூனையாக இருந்த சில அணிகள் தற்போது புலியாக மாறி உள்ளன. ஆட்டோ கார மாணிக்கமாக இருந்த சில அணிகள் தற்போது மாணிக் பாட்ஷாவாக மாறிவிட்டன.

Pakistan and England will lose semi-final chance in the 2023 World Cup Cricket

கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.

அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 5 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

தென்னாபிரிக்கா அணி அதிரடி: இன்னொரு பக்கம் 6 போட்டிகளில் ஆடிய தென்னாபிரிக்க அணி இதுவரை 5 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூட தென்னாபிரிக்க அணி அதிரடியாக வென்றது. நெட் ரன் ரேட் +2.032 என்று உச்சத்தில் உள்ள அந்த அணி இப்பத்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதன்பின் நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வென்றது. இந்த போட்டியை தவிர வரிசையாக மற்ற போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் நியூசிலாந்து கிட்டத்தட்ட செமி பைனல் செல்வது உறுதியாகி உள்ளது.

இன்னொரு பக்கம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கீழே இருந்த ஆஸ்திரேலியா அணி மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது. மீண்டும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துள்ளது. அதன்பின் வரிசையாக எல்லா போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதன் வீரர்களும் பார்மிற்கு வந்துள்ளனர். இந்த ஆஸ்திரேலியா அணியின் வருகையால் 3 பெரிய அணியில் ஒரு அணி செமி பைனல் வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இங்கிலாந்து: ஆனால் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. பாகிஸ்தான் 6 போட்டிகளில் ஆடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இரண்டு அணிகளின் செமி பைனல் வாய்ப்பும் வெகுவாக குறைந்துள்ளது.

தென்னாபிரிக்கா - 98%
இந்தியா- 98%
நியூசிலாந்து - 87%
ஆஸ்திரேலியா - 87%
இலங்கை - 10%
ஆப்கானிஸ்தான் - 10%
பாகிஸ்தான் - 4%
நெதர்லாந்து - 4%
வங்கதேசம் - 1%
இங்கிலாந்து - 1%

ஆகியவைதான் அணிகளின் செமி பைனல் வாய்ப்பு ஆகும். இதனால் பாகிஸ்தான் செமி பைனல் செல்வதும் , இங்கிலாந்து செமி பைனல் செல்வதும் இயலாத காரியம் ஆகி உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+