Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாவமா இருக்கு.." முக்கிய வீரர்களை எல்லாம் ஏலத்தில் கோட்டைவிட்ட ஆர்சிபி.. ஜாம்பவான் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் பெங்களூர் அணி 6 வீரர்களை எடுத்து இருந்தது. இருப்பினும், அவர்களது ஏல யுக்தியை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆர்சிபி இந்த முறையும் பல நல்ல வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் கோட்டைவிட்டதாகவும் பல விமர்சனங்கள் பார்க்க முடிகிறது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

ஐபிஎல் ஏலம் இப்போது நடந்து வருகிறது. முதல் நாள் ஏலம் நேற்று முடிந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் நடக்கிறது. இதில் பெங்களூர் அணியின் ஏல யுக்தி தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

ipl auction 2025 ipl auction 2025

பெங்களூர் அணி: முன்னதாக பெங்களூர் அணி நிர்வாகம் இந்தாண்டு மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்து இருந்தது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி 21 கோடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்த நிலையில், ரஜத் படிதார் ரூ.11 கோடிக்கும், யாஷ் தயாள் ரூ 5 கோடிக்கும் தக்கவைக்க்பட்டு இருந்தார். நட்சத்திர வீரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், சிராஜ்க உள்ளிட்டோர் கூட விடுவிக்கப்பட்டனர்.

இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் ஆர்சிபி அணி மொத்தமாகத் தன்னை மாற்றிக் கொண்டு புது டீம் உடன் களமிறங்கும் என்பதால் ஆர்வமாக இருந்தனர். பல கிரிக்கெட் விமர்சனங்களும் கூட ஆர்சிபி அணி சரியாகவே ரிட்டைன் செய்துள்ளதாகப் பாராட்டினர். அதேநேரம் நேற்றைய தினம் ஏலத்தில் அவர்கள் செயல்பட்ட விதம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

ipl auction 2025 ipl auction 2025

ராகுல்: ஆர்சிபி அணிக்குக் கடந்தாண்டு வரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இருந்து வந்தார். இருப்பினும், அவர் கடந்தாண்டு உடன் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்திற்கு ராகுலை எடுப்பார்கள் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே ராகுலுக்கு பெங்களூர் சென்றாலும் ரூ. 10.50 கோடி வந்தவுடன் ஒதுங்கிவிட்டார்கள். இறுதியில் டெல்லி அணி அவரை ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ராகுல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் பெங்களூர் அணிக்கு 2016ல் ஏற்கனவே விளையாடியிருக்கும் நிலையில், மீண்டும் இந்த முறை அவரை பெங்களூர் அணி ஏலம் எடுக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், பெங்களூர் அவரை ஏலம் கேட்கவில்லை. ஆர்சிபி அணியின் இந்த முடிவைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

விமர்சனம்: இது தொடர்பாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது ட்விட்டரில், "ஆர்சிபி அணிக்கு ஒரு நல்ல கீப்பர் பேட்டர் தேவைப்பட்டது.. ராகுலை மீண்டும் ஒரு குறைந்த விலையில் எடுக்கச் சிறந்த வாய்ப்பு அமைந்தது. ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.. அவர்களின் உத்தி குழப்பமானது.. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் பாவமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

பவுலர்: மேலும், ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை எப்போதும் பேட்டிங்கில் பிரச்சினை இருந்ததே இல்லை.. அவர்களுக்கு பவுலிங் தான் சிக்கல். சின்னசாமி மைதானத்தில் பவுலிங் போடுவதற்கேற்ப பவுலர்களை எடுக்க முடியாமல் பெங்களூர் அணி கடந்த காலங்களில் பெரியளவில் சிரமப்பட்டுள்ளது. பெங்களூர் அணியின் தோல்விக்கும் இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இதனால் இந்தாண்டு சாஹல் அல்லது அஸ்வினை ஏலத்தில் எடுப்பார்கள் என்று சொல்லப்பட்டது. சாஹலுக்கு ஓரளவுக்குச் சென்றாலும் கூட கடைசியில் ஏலம் எடுக்கவில்லை.. அஷ்வினுக்கு ஓரிரு முறை மட்டும் கேட்டுவிட்டு விட்டுவிட்டார்கள். தற்போது ஸ்பீன்னராக சுயாஷ் சர்மாவை மட்டும் எடுத்துள்ளனர். 21 வயதான சுயாஷ் சர்மா நல்ல பிளேயர் என்றாலும் அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்பதே பலரது கருத்து.

ஏன் தேவை: குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் ஏற்கனவே பவுலிங் போட்ட அனுபவம் கொண்ட சாஹலை எடுத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும் என்றும் இந்த முறையும் பெங்களூர் அணி ஏலத்தில் கோட்டைவிட்டதாகவே பலரும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். இணையத்திலும் இது தொடர்பான விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. இன்று இரண்டாவது நாள் ஏலம் நடக்கும் நிலையில், அதிலாவது பெங்களூர் சில நல்ல பவுலக்ளை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

முதல் நாள் ஏலத்தில் பெங்களூர் அணி எடுத்த வீரர்களின் விபரம்: லியாம் லிவிங்ஸ்டோன் (ரூ 8.75 கோடி), பில் சால்ட் (ரூ 11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (ரூ 11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (ரூ 12.5 கோடி), ரசிக் தார் (ரூ 6 கோடி), சுயாஷ் சர்மா (ரூ 2.6 கோடி).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+