நெருப்பு மாதிரி.. இறுதிப்போட்டியில் பொறுப்பை ஏற்ற கிங் விராட் கோலி.. 3 நிமிடங்கள் நடந்த உரையாடல்!
அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ள நிலையில், அந்த அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். கேப்டனாக இல்லையென்றாலும், வார்த்தைகள் மூலமாக சரியான நேரத்தில் அணிக்காக முன் நிற்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கி இருக்கிறது. 18 ஆண்டுகளில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் புதிய சாம்பியனாக உருவாகப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் போடுவதற்கு முன்பாக ஆர்சிபி அணியின் வீரர்கள் அனைவரும் கூடி நிற்க, விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
சக வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மாஸாக ஒரு உரையாடலை சிறந்த உடல்மொழியுடன் அளித்தார். அதனை வீடியோவில் காண்பித்த போதே ஆர்சிபி ரசிகர்களுக்கு நரம்பு புடைக்கும் அளவிற்கு உற்சாகம் ஏற்பட்டிருக்கும். ரஜத் பட்டிதார் ஏற்கனவே கொஞ்சம் பதற்றத்துடன் இருந்த நிலையில், சரியான நேரத்தில் விராட் கோலி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதுபோன்ற தருணங்களை விராட் கோலி ஏராளமான முறை எதிர்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரிலேயே 3 முறை விராட் கோலி இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்துள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டியை பொறுத்தவரை விராட் கோலி 3 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உட்பட 96 ரன்களை சேர்த்திருக்கிறார். 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐபிஎல் பைனலுக்கு வந்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சீசனில் விராட் கோலியின் ஆட்டம் உச்சத்தில் இருந்திருக்கிறது. 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 அரைசதங்கள் உட்பட 614 ரன்களை குவித்துள்ளார். ஆர்சிபி அணியின் பின் வரிசை வீரர்களுக்கு தேவையான அடித்தளத்தை விராட் கோலி அமைத்து கொடுத்துள்ளார். இன்னும் ஒரு போட்டியில் அதனை செய்தால், ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால கனவு முடிவுக்கு வரும் என்று பார்க்கப்படுகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications