30 வீரர்கள் இருக்காங்க.. 11 வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே! வேறு வழியே கிடையாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி மொத்தமாக 11 வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிஎஸ்கே அணியில் காயம் அடைந்த வீரர்கள் உட்பட 30 வீரர்கள் இருக்கும் சூழலில், 11 வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கின்றனர். இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சில வீரர்களை வாங்கவும், அணியை மாற்றி அமைக்கவும் இது அத்தியாவசிய தேவையாக மாறி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் இன்று மாலை 5 மணிக்குள் ரிடென்ஷன் பட்டியலை வெளியிட வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்ய அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று மாலை பல்வேறு டிரேட் அறிவிப்புகளும் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

CSK

இதனிடையே சிஎஸ்கே அணியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை காயம் அடைந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள் உட்பட 30 வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கின்றனர். அதில் 11 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள். ஐபிஎல் விதிகளின்படி ஒரு அணிக்கு அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்யவே அனுமதி உள்ளது.

அதேபோல் ஒரு அணியில் 25 வீரர்களை மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடியும். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் குறைந்தபட்சம் 11 வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரசாந்த் வீர், ஃபோல்க்ஸ், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்ரி, ஸ்பென்சர் ஜான்சன், ஃபாரஸ்டர், அமன் கான், குல்திப் சென், நொரன்ஹா, ஆகாஷ் மத்வால் ஆகியோரை ரிலீஸ் செய்ய வேண்டும்.

அதேபோல் தோனியும் ஓய்வு பெற்றால், சிஎஸ்கே அணிக்கு கூடுதல் நன்மை. இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்கு மொத்தமாக ரூ.31.25 கோடி கையிருப்பில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 கோடி ஏலத்தொகை அதிகரிக்கப்படும். அதனை சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியில் 11 வீரர்களை ரிலீஸ் செய்யும் பட்சத்தில், 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தமாக 4 இந்திய வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் வாங்க வேண்டிய தேவை இருக்கும். அப்போது ரூ.31.25 கோடி இருந்தால், சராசரியாக ஒரு வீரருக்கு ரூ.5.2 கோடி செலவிட முடியும். இதனால் எந்த வீரரையும் விரட்டி சென்று சிஎஸ்கே அணியால் கட்டாயமாக வாங்க முடியும் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+