இவரை எல்லாம் டீம்லயே எடுக்க மாட்டேன்.. கமெண்டரியில் விளாசிய கிரிஸ் ஸ்ரீகாந்த்.. டென்ஷனாக்கிய வீரர்
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆடி வரும் மேட்சில் கிரிஸ் ஸ்ரீகாந்த் இந்திய வீரர் ஒருவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இதன் மூலம் 5 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.

இங்கிலாந்து; இந்த நிலையில்தான் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா ஆடி வருகிறது. இந்திய அணியில் இந்த போட்டியில் மாற்றம் செய்யப்படவில்லை. ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி தற்போது 99-3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இந்தியா தற்போது ரோஹித் சர்மாவின் அரைசதம் காரணமாக சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்: வரிசையாக சிறப்பாக ஆடிய கோலி இன்று டக் அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். முழுமையாக ஷார்ட்டாக் வராமல் பாதி ஷார்ட் பந்திற்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி உள்ளார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை எடுத்த ரன்கள் - 128 ரன்கள் மட்டுமே ஆகும்.,
இன்னிங்ஸ் - 6
சராசரி - 32
ஸ்ட்ரைக் ரேட்- 81.01 என்று மோசமாக ஆடி உள்ளார்.

விளாசல்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆடி வரும் மேட்சில் கிரிஸ் ஸ்ரீகாந்த் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் விமர்சனத்தில்.. நான் இருந்தால் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயரை அணியிலேயே எடுக்க மாட்டேன் . அவர் மோசமாக ஆடுகிறார். ஷார்ட் பந்து போட்டால் அவுட் ஆகிறார்.
கே எல் ராகுல் முன்பே இறங்க வேண்டும். அணியில் இஷான் கிஷனை எடுக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்க கூடாது. அவரின் வீக்னஸ் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று கிரிஸ் ஸ்ரீகாந்த் விளாசி உள்ளார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications