விராட் கோலி, ரோகித் சர்மா.. 2026ல் எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள்? பிசிசிஐ பட்டியல்!
மும்பை: 2026ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள கிரிக்கெட் தொடர் குறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் எத்தனை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்பதை பார்க்கலாம்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இதனால் இரு வீரர்களுமே ஒருநாள் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி 2026ஆம் ஆண்டில் எந்தெந்த அணிகளுடன் எந்த வடிவங்களில் விளையாட உள்ளது என்பது குறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன்பின் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்கிறது. பின்னர் ஐபிஎல் தொடரில் சுமார் 3 மாதங்கள் சென்றுவிடும்.
இதையடுத்து சொந்த மண்ணில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. பின் ஜூலை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
தொடர்ந்து இலங்கை மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. பின்னர் நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
இறுதியாக டிசம்பர் மாதத்தில் இலங்கை அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் மூலமாக 18 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ரசிகர்கள் பார்க்க முடியும். இதனால் இரு வீரர்களின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications