அகீல் ஹொசைனை சேர்க்காத சிஎஸ்கே.. ஷார்ட் ஓவரில் 24 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா.. 15 பந்தில் அரைசதம்!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதத்தை விளாசி இருக்கிறார். அதிலும் ஆஃப் ஸ்பின்னரான மேத்யூ ஷார்ட் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 25 ரன்களை விளாசினார். இதற்கு அகீல் ஹொசைனுடன் சிஎஸ்கே அணி விளையாடி இருக்கலாம் என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி தரப்பில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஐதராபாத் அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் இடதுகை பேட்ஸ்மேன்கள். இதனால் அகீல் ஹொசனை பெஞ்சில் அமர வைத்தது.

Abhishek Sharma

அவருக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னரான மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டார். அதேபோல் காயம் அடைந்த கலீல் அஹ்மத்திற்கு பதிலாக முகேஷ் சவுத்ரி சேர்க்கப்பட்டார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே ஷார்ட் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

முதல் ஓவரில் அபிஷேக் சர்மா - ஹெட் இருவருமே அடக்கி வாசித்தனர். ஆனால் முகேஷ் சவுத்ரி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்ஸ் அடித்து அட்டாக்கை தொடங்கினார். இதன்பின் அன்சுல் கம்போஜ் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. தொடர்ந்து மேத்யூ ஷார்ட் வீசிய 5வது ஓவரில் 4, 4, 4, 6, 6 என்று அபிஷேக் சர்மா ஒரு இடி இடித்தார்.

இதன் மூலமாக அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோரும் 63 ரன்களாக இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் புலம்ப தொடங்கினர். ஏனென்றால் இடதுகை ஸ்பின்னரான அகீல் ஹொசைன் பவுலிங் செய்தால், அதிக ரன்களை சேர்ப்பார்கள் என்றே ஷார்ட் கொண்டு வரப்பட்டார். ஆனால் ஆஃப் ஸ்பின்னரையும் அபிஷேக் சர்மா விளாசினார்.

இதற்கு அகீல் ஹொசைனையே சேர்த்திருக்கலாம் என்று விவாதம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போது அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை அகீல் ஹொசைன் வீழ்த்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர்கள் பவுலிங் செய்வதே அரிதான விஷயமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+