100 சிக்ஸ்.. தோனி, ரெய்னா வரிசையில் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட்.. இனிதான் ஆட்டம் இருக்கு!
சென்னை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், அவர் தனது 100வது சிக்ஸரை அடித்தார். இதன் மூலம், சிஎஸ்கே அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தாலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். 20 ஓவர்களும் பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், 60 பந்துகளில் 74 ரன்களை சேர்த்தார்.

இந்த இன்னிங்ஸின் போது ருதுராஜ் கெய்க்வாட் ஒரு முக்கியமான சாதனையையும் படைத்துள்ளார். ஜெசன் ஹோல்டர் வீசிய 14வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் தனது மூன்றாவது சிக்ஸரை விளாசி, ஐபிஎல் தொடரில் 100 சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன்மூலம் தோனி, ரெய்னா மற்றும் சிவம் துபே ஆகிய சிஎஸ்கே வீரர்களுக்கு அடுத்தபடியாக, 100 சிக்ஸர்களை விளாசிய 4வது வீரராக என்ற பெருமையை ருதுராஜ் பெற்றுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடும் 79வது போட்டி இதுவாகும். தற்போது அவரது மொத்த சிக்ஸர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரரான தோனி, சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவர் 248 ஆட்டங்களில் 234 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, 176 போட்டிகளில் 180 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். குஜராத் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த சிவம் துபே, 69 ஐபிஎல் போட்டிகளில் 106 சிக்ஸர்களை விளாசி 3வது இடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை ஆர்சிபி அணியின் விராட் கோலி வசம் உள்ளது.
இதுவரை 274 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கோலி, ஆர்சிபி அணிக்காக 303 சிக்ஸர்களை அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த வலது கை பேட்டரான இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வியாழக்கிழமை அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தனது 300வது சிக்ஸரை அவர் எட்டினார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications