வருங்கால சிஎஸ்கே கேப்டன்.. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் ஆர்டரில் மாற்றம்.. ருதுராஜ் கொடுத்த மெகா அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. இதனால் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு தள்ளப்படுவார் என்று தெரிகிறது. இதனால் ஆயுஷ் மாத்ரேவின் செயல்பாடுகள் பாதிக்குமா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு அணியும் விளம்பரப் பணிகளை முடித்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை சிஎஸ்கே அணி 6வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக இளம் வீரர்களை கொண்ட அணியையும் தயார் செய்திருக்கிறது.

Ruturaj Gaikwad

அதேபோல் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனையும் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன்ஸ் டே நிகழ்ச்சியில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணிக்கு நானும், சஞ்சு சாம்சனும் தொடக்கம் கொடுக்க உள்ளோம் என்று அறிவித்தார்.

இது சிஎஸ்கே ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முடிவு முன்னதாகவே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே ஏற்கனவே இந்திய யு19 அணிக்காக நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடிய பழக்கம் கொண்டவர்.

அதேபோல் பவர் பிளேவில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், ஆயுஷ் மாத்ரேவால் எளிதாக அந்த இடத்தை நிரப்பிட முடியும் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கருதுகிறது. இதனை அஸ்வின் ஏற்கனவே அவரின் யூடியூப் சேனலில் பேசி இருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் பேச்சு அமைந்துள்ளது.

இதனிடையே ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக உர்வில் படேல் களமிறங்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வளர்ந்து வரும் வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர். இன்னும் சிலரோ, சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே என்றும் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+