CSK vs GT: 10வது படிக்குற வயசுல சின்னப்பய அந்த அடி அடிக்குறான்! ருதுராஜ் எதுக்குத்தானோ! இப்படி ஒரு மோசமான சாதனை
சென்னை: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
49 பந்தில் அவர் அரை சதம் அடித்தாலும், அரை சதம் அடிக்க அதிக பந்துகள் எடுத்த வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் ருதுராஜ். 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்சி ஆர்.ஆர். அணியில் பட்டயை கிளப்பி வரும் நிலையில், தற்போது நெட்டிசன்களில் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் ருத்ராஜ்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் களம் கண்டன. டாசில் இன்று அதிர்ஷ்டம் குஜராத் பக்கம் வீச கேப்டன் சுப்மன் கில் பௌலிங் தேர்வு செய்தார்.
தொடர்ந்து ரன் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் சஞ்சு சம்சன் வெறும் 11 ரன்னிலும், உர்வில் பட்டேல் நான்கு ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அணியை தூக்கி நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பஸ்கான் வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார். இதனால் வெறும் 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே மோசமான நிலையில் இருந்த போதும் ஓரளவு நம்பிக்கை கொடுத்தது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான்.
ஒருபுறம் சரசரவென விக்கெட்டுகள் சரியா நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ருத்ராஜ். நிறைய டாட் பால்களை சந்தித்தாலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 60 பந்துகளை நான்கு சிக்ஸர், 6 போர் அடித்து 74 ரன்கள் குவித்தார். சிவம் துபே, ஜமி ஓவர்டன் ஆகியோர் சற்று கை கொடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. பௌலிங் கலக்கிய ககிஷோ ரபாடா 25 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை தூக்கினார்.
தொடர்ந்து 159 என்ற வெற்றிய இலக்கை மிகச் சுலபமாக எட்டியது குஜராத் டைட்டன்ஸ். கேப்டன் சுப்மன் கில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய சாய் சுதர்சன் நாலாபுரமும் பந்துகளை சிதறடித்தார். 46 பந்துகளில் 7 சிக்ஸர், 4 போர்களை அடித்த அவர் 87 ரன்கள் குவித்து குஜராத் டைட்டன்சை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 16 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது குஜராத்.
பேட்டிங்கிலும், பெளலிங்கிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சொந்த மைதானத்தில் சொதப்பியது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க வைபவ் சூர்யவன்சியுடன் ஒப்பிட்டு, சிஎஸ்கே கேப்டன் ருத்ரஜை வெளுத்தடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
60க்கும் மேற்பட்ட டாட் பால்களை சிஎஸ்கே சந்தித்த நிலையில் ஒரு அரை சதம் அடிப்பதற்காக அதிகபந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் இடம்பிடித்து மோசமான சாதனை படைத்திருக்கிறார். 49 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் 2014 இல் டுவைன் ஸ்மித்தின் 49 பந்தில் அரைசதம் என்ற சாதனையை சமன் செய்தார். 2010 ஆம் ஆண்டு பார்த்திவ் பட்டேல் சிஎஸ்கேவுக்காக விளையாடிய போது 53 பந்தில் அரைசாதம் அடித்தது தான் மிக மோசமான சாதனையாக இருக்கிறது. அதற்கு அடுத்து மேத்யூ ஹைடன், முரளி விஜய், என சிஎஸ்கே வீரர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications