ஒரே மாதிரி அவுட் ஆகக்கூடாது தம்பி.. ஓய்வறைக்கு திரும்பிய சஞ்சு சாம்சனுக்கு பாடமெடுத்த கம்பீர்!
சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இதன்பின் ஓய்வறைக்கு சஞ்சு சாம்சன் திரும்பிய போது, உடனடியாக கம்பீர் அவரிடம் ஒரே தவறை மீண்டும் செய்கிறாய் என்று நிற்க வைத்து பாடம் எடுத்திருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். கடந்த 5 போட்டிகளிலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவராவது டக் அவுட்டாகி வெளியேறுவது வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 48 ரன்களாக உள்ளது. இதற்கு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக அமைந்தார். அபிஷேக் சர்மாவை பாதுகாக்கும் பொறுப்பு சஞ்சு சாம்சன் வசம் ஒப்படைக்கப்பட்டது. முதல் சில ஓவர்களுக்கு அபிஷேக் சர்மாவை பதுக்க வைக்க வேண்டும் என்று இந்திய அணி தீவிரமாக உள்ளது.
இதனை 3 ஓவர்களுக்கு சஞ்சு சாம்சன் சிறப்பாக செய்தார். நல்ல தொடக்கத்தை கொடுத்த சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் ஓய்வறைக்கு திரும்பிய சஞ்சு சாம்சனுக்கு சக வீரர்களும், பயிற்சியாளர்களும் பாராட்டு தெரிவித்தனர். அப்போது கம்பீர் சஞ்சு சாம்சனை அழைத்து, 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது சஞ்சு சாம்சன் எப்படி விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது தொடர்பாக அந்த உரையாடல் அமைந்தது. டீப் மிட் விக்கெட்டில் நின்ற ஃபீல்டரிடம் சஞ்சு சாம்சன் விக்கெட்டை கொடுத்திருக்கிறார். ஏற்கனவே நமீபியா அணிக்கு எதிரான போட்டியிலும் சஞ்சு சாம்சன் இதே ஸ்டைலில், இதே ஷாட் காரணமாக ஆட்டமிழந்தார். இதனை கம்பீர் வெளிப்படையாகவே கூறினார்.
மீண்டும் மீண்டும் அதே பாணியில் விக்கெட்டை பறிகொடுக்க கூடாது என்று கம்பீர் அறிவுறுத்தினார். இதன்பின் சஞ்சு சாம்சன் தனது இடத்திற்கு சென்றார். தொடர்ந்து ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு எஞ்சிய போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications